ரேஷன் கடையில் இனி கூகுள் பே, பேடிஎம் வசதி.. மாவட்டத்திற்கு 10 மாதிரி கடை.. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்
தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதிகள் ஏற்படுத்தப்படும் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட சில நியாயவிலை கடைகளில் மட்டும் சிலிண்டர் விற்பனையும் அறிமுகப்படுத்தப்படவிருப்பதாகவும் குறிப்பிட்டார்.

மேலும் படிக்க:மேலும் ஒரு அதிர்ச்சி.. ”நீட் தேர்வு” தோல்வி பயத்தில் மாணவி தூக்கிட்டு தற்கொலை..
இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஐ. பெரியசாமி, ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். மேலும் தமிழகத்தில் உள்ள குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் 5 கிலோ மற்றும் 2 கிலோ எடையுள்ள சிலிண்டர்களின் விற்பனை விரைவில் தொடங்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் படிக்க:கோயில் யானை மீது மீண்டும் கொடூர தாக்குதல்..? யானையை திருப்பி கேட்ட அசாம் அரசு... தமிழகம் வந்த சிறப்பு குழு
தொடர்ந்து பேசிய அவர், நியாயவிலைக் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க சுமார் 2 கி.மீ மேல் பயணிக்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு இல்லாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதி அறிமுகம் செய்யப்பட்டு, படிபடியாக விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிவித்தார்.