Asianet News TamilAsianet News Tamil

வேஸ்ட் பொருட்களை வைத்து கடவுள் சிற்பங்கள்; ஆயுத பூஜையை இப்படியும் கொண்டாடிய ஹூண்டாய் தொழிலாளர்கள்…

God sculptures with waste material Hyundai workers celebrating aayudha Pooja
God sculptures with waste material Hyundai workers celebrating aayudha Pooja
Author
First Published Sep 30, 2017, 8:08 AM IST


காஞ்சிபுரம்

ஹுண்டாய் தொழிற்சாலை தொழிலாளர்லள் தொழிற்சாலை வேஸ்ட் பொருள்களில் இருந்து பல்வேறு கடவுள்களை உருவாக்கி ஆயுதபூஜையை சிறப்பாகக் கொண்டாடினர். 

காஞ்சிபுரம் மாவட்டம், திருபெரும்புதூரை அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் கார் உற்பத்தி செய்யும் ஹூண்டாய் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது.

இங்கு வருடந்தோறும் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் (வேஸ்ட்) பொருள்களை வைத்து கடவுள் சிற்பங்களை உருவாக்கி அவற்றை வைத்தே ஆயுத பூஜை கொண்டாடுவர்.

அதேபோல இந்தாண்டும் ஹூண்டாய் தொழிற்சாலையில் உள்ள பொறியியல் துறை, பெயின்ட் ஷாப், அசம்ப்ளி ஷாப், பாதுகாப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் தங்களது துறையில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுப் பொருள்களை வைத்து கடவுள் சிற்பங்கள், கலைப் பொருள்கள், இயற்கை விவசாயம், நம்ம ஊர் திருவிழா, தஞ்சை பெருவுடையார் கோயில், குதிரை சாரட் வண்டி, அனுமன் சிலை, துர்கை அம்மன் ஆகிய வடிவங்களை உருவாக்கி அந்தந்த துறை வளாகத்தில் வைத்து ஆயுத பூஜை கொண்டாடினர்.

இந்த பூஜையில், உற்பத்தித் துறையின் முதுநிலை துணைத் தலைவர் கணேஷ்மணி, உற்பத்தி துறையின் நிர்வாக இயக்குநர் எஸ்.டி.நேவ், நிர்வாக துணைத் தலைவர் ஸ்டீபன்சுதாகர் உள்ளிட்டத் தொழிற்சாலையின் முதுநிலை அதிகாரிகள், தொழிலாளர்கள் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். 

Follow Us:
Download App:
  • android
  • ios