KFCயில் வாங்கிய பர்கரில் கிடந்த கையுறை.. வாடிக்கையாளர் அதிர்ச்சி - பரபரப்பு சம்பவம் !
கே.எப்.சியில் வாங்கிய பர்கரில் கையுறை இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரி கோரிமேடு அருகே தமிழக பகுதியான பட்டானூர் சர்வீஸ் சாலையில் கே.எப்.சி ஓட்டல் உள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை சேர்ந்தவர் டேவிட் (29). இவர் தனியார் இன்சூரன்ஸ் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக வேலை செய்து வருகிறார். இவரும், இவரது நண்பரும் கடந்த 5 ஆம் தேதி மாலை ஆரோவில் அருகே உள்ள பிரபல தனியார் உணவுக்கடையான கேஎஃப்சியில் பர்கர் வாங்கி உள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..‘அந்த’ இடத்தில் கைவைத்த பாஜக பொதுச்செயலாளர்.. சசிகலா புஷ்பாவிற்கு நடந்தது என்ன ? சர்ச்சையில் பாஜக!
அதை சாப்பிடும்போது, அதில் பிளாஸ்டிக் பொருள் தென்பட்டது. உடனே அந்த பர்கர் முழுவதையும் பிரித்து பார்த்த பொழுது அதில் நீல நிற கையுறை இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த டேவிட் இதுகுறித்து உடனடியாக ஓட்டல் ஊழியர்களிடம் தெரிவித்தார். ஊழியர்கள் மன்னிப்பு கேட்டு வேறு வேறு பர்கர் தருவதாக கூறியுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு..ஸ்ரீமதி வழக்கில் புதிய திருப்பம்.. பள்ளி நிர்வாகத்துடன் பேரம் பேசும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு ! - பரபரப்பு
அதற்கு டேவிட் வேண்டாம் என கூறி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு வீடியோ எடுத்து புகாரையும் அனுப்பி உள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரபல உணவுக்கடையில் சாப்பிடும் தின்பண்டத்தில் கையுறை இருந்தது வாடிக்கையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு..“தமிழக கட்சிகளும் லிஸ்டில் இருக்கு”.. லெட்டர் பேடு கட்சிகளை அதிரடியாக தூக்கிய தேர்தல் ஆணையம்.!