கண்பார்வையற்ற ஜெர்மன் பாடகியின் பாடலை கேட்டு மெய்சிலிர்த்து போன சத்குரு - ஈஷாவில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
ஜெர்மன் நாட்டை சேர்ந்த காஸ்மே என்கிற கண்பார்வையற்ற பாடகியின் பாட்டை கேட்டு மனமுருகிய சத்குரு அவருக்கு பரிசு ஒன்றை அளித்துள்ளார்.
ஜெர்மனியை சேர்ந்தவர் காஸ்மே. சுயாதீன இசைக்கலைஞரான இவர் இந்தியாவின் கிளாசிக்கல் இசைப் பாடல்களை மறு உருவாக்கம் செய்து அதை சோசியல் மீடியாவில் பதிவேற்றி அதன் மூலம் பேமஸ் ஆனார். இவர் கடந்த பிப்ரவரி 29-ந் தேதி கோவையில் உள்ள ஈஷா யோகா மையத்துக்கு வருகை தந்திருந்தார்.
அப்போது ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் சத்குருவுக்காக ஒரு பாடலை டெடிகேட் செய்து பாடினார். அவர் ஆதி சங்கராச்சாரியார் கம்போஸ் செய்த நிர்வான சாதகம் என்கிற பாடலை தான் சத்குரு முன் பாடி இருந்தார். காஸ்மே-வின் தெய்வீக குரலில் அந்த பாடலைக் கேட்ட சத்குரு மெய்சிலிர்த்துப் போனார்.
காஸ்மே கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளி என்பதால் அவர் பாடல் பாடி முடித்ததும் அவர் அமர்ந்திருந்த இடத்திற்கே எழுந்து சென்ற சத்குரு, தான் கழுத்தில் அணிருந்திருந்த மலர்மாலையை அவருக்கு அணிவித்து, தன் கையால் ஆசீர்வாதமும் செய்தார். அந்த வீடியோவை காஸ்மே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டிருக்கிறார்.
இதையும் படியுங்கள்... இந்தியா குறித்த புதிய பார்வையை கொடுக்கிறது ஈஷா யோக மையம்.. G20 பிரதிநிதிகள் புகழாரம்..!
காஸ்மே குறித்து சத்குரு கூறுகையில், “நமஸ்காரம் காஸ்மே, ஈஷா யோகா மையத்திற்கு நீங்க வந்தது மகிழ்ச்சி. பக்திக்கு மொழி ஒரு தடையில்லை என்பதை நீங்கள் உங்கள் பாடல் மூலம் நிரூபித்துவிட்டீர்கள். சாதிக்க பார்வையின்மை ஒரு தடையல்ல என்பதை நீங்கள் நிரூபித்துள்ளீர்கள். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள் என பேசி உள்ளார். சத்குரு தன்னை பற்றி பேசிய வீடியோவை பதிவிட்டுள்ள காஸ்மே, “வாவ்.. நான் கேட்டதிலேயே இது தான் மிகவும் ஊக்குவிக்கும் வார்த்தைகள். உங்களோடு இருந்த தருணத்தை மிகவும் என்ஜாய் செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
ஈஷா யோகா மையத்தில் இருந்தபோது, யோகா பயிற்சி எடுத்துக்கொண்ட காஸ்மே, இந்தியாவின் கலாச்சாரம் பற்றியும் கோவில்கள் பற்றியும் தெரிந்துகொண்டாராம். அதேபோல் ஈஷா யோகா மையம் சமூகத்திற்காக செய்யும் செயல்கள் பற்றியும் அறிந்துகொண்டாராம். காஸ்மேவின் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்... ஈஷா மையத்தின் ஆதியோகி சிவன் ரதத்திற்கு ஓசூரில் தேவாரம் பாடி சிவ பக்தர்கள் சிறப்பு வரவேற்பு