கங்கை அமரன் திருப்பூரில் பேட்டி...
தன்னிடமிருந்து அபகரிக்கப்பட்ட, பண்ணை வீட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கங்கை அமரன் போர்க்கொடி உயர்த்தி உள்ளார். சசிகலாவால், தன்னிடமிருந்து அபகரிக்கப்பட்ட பண்ணை வீட்டை திரும்ப ஒப்படைக்க வேண்டுமென, கங்கை அமரன், செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்துள்ளார்.
22 ஏக்கர் பரப்பளவிலான பண்ணை வீடு :
தனக்கு சொந்தமான, மகாபலிபுரம் சாலையில் உள்ள , பையனூர் என்ற இடத்தில் 22 ஏக்கர் பரப்பளவிலானபண்ணை வீட்டை , சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் மிரட்டி வாங்கியதாக ஏற்கனவே , இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் தெரிவித்து இருந்தார்.
சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி :
இந்நிலையில், பரப்பான அரசியல் சூழ்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா விற்கு எதிராக தற்போது போர்க்கொடி உயர்த்திய கங்கை அமரன் , “ என் சொத்தை திருப்பி கொடு “ என தற்போது, திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்து சசிகலாவுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார்.
குறிப்பு : யாரும் சசிகலாவை எதிர்க்காத இந்நிலையில், ஒபிஎஸ் கு, பின்பு தற்போது கங்கை அமரன் வாய் திறந்துள்ளார் என்பது குறிபிடத்தக்கது.
