கோத்தகிரி காந்தி மைதானத்தில் சமூக விரோதிகள் நுழைந்து திறந்தவெளி பாராக பயன்படுத்தி வருகின்றனர் என்று விளையாட்டு வீரர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
குன்னூர் கல்வி மாவட்டங்களுக்கு இடையேயான விளையாட்டுப் போட்டிகள் கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்காக உள்ளூர் விளையாட்டு வீரர்கள், தினமும், காலை, மாலையில் பயிற்சி எடுத்து வருகின்றனர். தவிர, இங்கு அரசு நிகழ்ச்சிகளும் நடத்தப்படுவது வழக்கம்.
கோத்தகிரி பேரூராட்சி நிர்வாகத்தின் வசமிருந்த மைதானம், தற்போது, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பராமரிப்பில் இருக்கிறது.
இந்த நிலையில், காந்தி மைதானத்தின் கம்பி வேலியை உடைத்து, சமூக விரோதிகள் உள்ளேச் சென்று மது அருந்துவது போன்ற சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
மேலும், மைதானத்திர்கு உள்ளேயே மது பாட்டில்கள், பிளாஸ்டிக் டம்ளர், உணவுக் கழிவுகளை வீசிச் செல்கின்றனர். இதனால், பயிற்சி மேற்கொள்வோர் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
எனவே, உடைந்த தடுப்பு வேலியை சீரமைப்பதுடன், மது அருந்துவோரின் அத்துமீறலைக் கட்டுப்படுத்த வேண்டும் என விளையாட்டு வீரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
