Asianet News TamilAsianet News Tamil

கஜா புயல் எதிரொலி... ரயில் சேவைகளில் அதிரடி மாற்றம்...!

கஜா புயல் இன்று அல்லது இரவில் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது. ஆகையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மட்டும் ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

Gaja cyclone...trains cancelled
Author
Tamil Nadu, First Published Nov 15, 2018, 10:37 AM IST

கஜா புயல் இன்று அல்லது இரவில் நாகப்பட்டினம் அருகே கரையை கடக்க வாய்ப்புள்ளது. ஆகையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று மட்டும் ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

சென்னைக்கு அருகே 300 கி.மீ., நாகைக்கு அருகே 300 கி.மீ. தொலைவில் புயல் மையம் கொண்டுள்ளது. இன்று மாலை பாம்பன் மற்றும் கடலூர் பகுதிக்கு இடையே நாகை அருகே புயல் கரையை கடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. Gaja cyclone...trains cancelled

இந்நிலையில் திருச்சி-ராமேஸ்வரம், மதுரை- ராமேஸ்வரம் பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ராமேஸ்வரத்தில் இருந்து சென்னைக்கு வரும் சேது எக்ஸ்பிரஸ் ரயில் மானாமதுரையில் இருந்து புறப்படும். மேலும் ராமேஸ்வரம்- திருப்பதி எக்ஸ்பிரஸ் மதுரையில் இருந்தும், ராமேஸ்வரம்- கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மானாமதுரையில் இருந்தும் புறப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. Gaja cyclone...trains cancelled

ஒக்காவிலிருந்து ராமேஸ்வரம் வரை செல்லும் விரைவு ரயில் மதுரை வரை மட்டுமே செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணி மற்றும் மன்னார்குடி ஆகிய மார்க்கத்தில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் - சென்னை இடையே இயக்கப்படும் உழவன் ரயில் சேவையும் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை எழும்பூரில் இருந்து திருச்செந்தூர் வரை இயக்கப்படும் விரைவு ரயில் விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி வழியாக இயக்கப்படும் எனவும் தேற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios