இன்னும் 4 மணி நேரத்தில்... இத்தனை செ.மீ. மழையா? பீதியில் பொதுமக்கள்
கஜா புயலைத் தொடர்ந்து கடலூர், நாகை, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 20 செ.மீ. க்கு மேல் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கஜா புயலைத் தொடர்ந்து கடலூர், நாகை, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் 20 செ.மீ. க்கு மேல் கனமழை வெளுத்து வாங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கஜா புயல் இன்று இரவு 8-11 மணிக்குள் பாம்பன் மற்றும் கடலூர் பகுதிக்கு இடையே நாகை அருகே புயல் கரையை கடக்கிறது. இந்நிலையில் இது தொடர்டபான வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், கஜா புயல் காரணமாக அதிகபட்சமாக கடலூர், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு அதிகமாக மழை பெய்யும் என கூறியுள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரி ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 80 கி.மீட்டர் முதல் 100 கி.மீட்டர் வரையிலும் வேகம் அதிகரிக்கக்கூடும்.
கஜா புயல் காரணமாக புயல் பாதிப்புள்ள மாவட்டங்களில் தனியார் நிறுவன ஊழியர்கள் 4 மணிக்குள் வீடு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் புயல் தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் தொடர்பாக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்து வருகிறது.