கஜா புயல் எதிரொலி… 2 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கஜா புயல் கரையை கடக்கப்போவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அப்போது பெரும் சேதம் ஏற்படும் என எச்சரித்ததால், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Gaja cyclone echo...2 District school, colleges holidays

கஜா புயல் கரையை கடக்கப்போவதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. அப்போது பெரும் சேதம் ஏற்படும் என எச்சரித்ததால், கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  Gaja cyclone echo...2 District school, colleges holidays

வங்கக்கடலில் உருவான கஜா புயல் கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என முதலில் கணிக்கப்பட்டது. பிறகு, புயல் நகரும் திசை மற்றும் அதன் வேகத்தில் மாற்றம் ஏற்பட்டதால் கடலூருக்கும் - பாம்பனுக்கும் இடையில் கரையை கடக்கும் என்று கூறப்படுகிறது.

இதைதொடர்ந்து, கஜா புயல் நாளை மாலை கரையை கடக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயல் கரை கடக்கும்போது கடலூர், நாகை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யலாம் என கருதி மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பேரிடர் மீட்புக்குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். Gaja cyclone echo...2 District school, colleges holidays

இதையொட்டி, கஜா புயல்  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு  நாளை விடுமுறை அளித்து கலெக்டர் உத்தரவிட்டார். கடலூர் மாவட்டம் முழுவதும் சிறப்பு முகாம்களை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இரவு, பகலாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்டோருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. Gaja cyclone echo...2 District school, colleges holidays

கடலூரில் முன்னெச்சரிக்கை ஏற்பாடு குறித்து ஆய்வு செய்த சிறப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, செல்போன்களை முன்கூட்டியே சார்ஜ் செய்து வைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios