10ம் வகுப்பு பொதுத்தேர்வு; தவறான கேள்விகளுக்கு முழு மதிப்பெண்... அறிவித்தது தேர்வுத்துறை!!

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. 

full marks for wrong questions asked in 10th public exam

10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. முன்னதாக 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த 6 ஆம் தேதி தொடங்கி, 20 ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்வை தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 4,167 மையங்களில் 9.2 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணிவிகள் எழுதினர். இந்த நிலையில் 10ஆம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிகள் இன்று (ஏப்.24) முதல் மே 3 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

இதையும் படிங்க: நிதி அமைச்சர் ஆடியோ பற்றி மத்திய அரசு விசாரணை தேவை: ஈபிஎஸ் வலியுறுத்தல்

தேர்வு முடிவுகள் மே.17 ஆம் தெதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட உள்ளனர். இதனிடையே 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தவறாக கேட்கப்பட்ட கேள்விகளுக்கு முழு மதிப்பெண் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: கோவையில் இட்லி கண்காட்சி... பல்வேறு வடிவங்களில் 500 வகையான இட்லிகள் தயாரிப்பு!!

இதுக்குறித்த அறிவிப்பில், ஆங்கில பாடத்தில் 5 மதிப்பெண்கள் போனசாக வழங்கப்படும். அதன்படி தவறாக கேட்கப்பட்ட 3 ஒரு மதிப்பெண் கேள்விகளுக்கும், ஒரு 2 மதிப்பெண் கேள்விக்கும் இந்த மதிபெண்களை வழங்கப்பட உள்ளது. மேலும் ஒரு மதிப்பெண் கேள்வி எண்கள் 4, 5, 6 மற்றும் 2 மதிப்பெண் கேள்வி எண் 28க்கும் முழு மதிப்பெண் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios