சிறுதானியத் திருவிழா முதல் பண்ணைச் சுற்றுலா வரை! தமிழக வேளாண் பட்ஜெட் சிறப்பு அம்சங்கள்
அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்த 2023-24 நிதி ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டில் அங்கக வேளாண்மைக்கான நம்மாழ்வாளர், வேளாண் விழிப்புணர்வுக்காக பண்ணைச் சுற்றுலா முதலிய பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2023-24ஆம் நிதி ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அதைத் தொடர்ந்து வேளாண் பட்ஜெட்டை விவசாயத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
சிறுதானியம், பலா
சிறுதானிய பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் நீலகிரி, தருமபுரி மாவட்டங்களில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 2 கிலோ கேழ்வரகு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பலா ரகங்களை 21 மாவட்டங்களில் 2500 ஹெக்டேரில் உயர்த்தி செய்ய ரூபாய் 3 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
கரும்பு, நெல்
கரும்பு விவசாயிகளுக்கு சிறப்பு ஊக்கத்தொகையாக ஒரு டன்னுக்கு ரூ.195 கூடுதலாக வழங்கப்படும். 200 ஏக்கர் பரப்பில் பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை உற்பத்தி செய்து, மானிய விலையில் விவசாயிகளுக்கு விநியோகிக்க ரூ.50 லட்சம் நிதி அறிவிப்பட்டுள்ளது. சன்ன ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.100, பொது ரக நெல் குவிண்டாலுக்கு ரூ.75 கூடுதல் ஊக்கத்தொகை அளித்து கொள்முதல் செய்யப்படும்.
உடனே ஒரு லட்சம் தேவையா? தனிநபர் கடனுக்கு குறைந்த வட்டி கொடுக்கும் வங்கிகள்
வேளாண் வளர்ச்சித் திட்டம்
2,504 கிராமங்களில் வேளாண்மை சிறப்பாக நடைபெறுவதற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தவும் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் ரூ.230 கோடி செலவில் செயல்படுத்தப்படும்.
சிறுதானியத் திருவிழாக்கள்
சிறுதானிய ஆண்டை முன்னிட்டு தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் தொடங்குப்படும். அதன் ஒரு பகுதியாக சிறுதானிய திருவிழாக்கள் தமிழகத்தின் பல பகுதிகளில் நடத்தப்படும். ரூ.82 கோடி மதிப்ப்பீட்டில் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
நம்மாழ்வார் விருது
மாநில வேளாண் வளர்ச்சித் திட்டத்திற்காக ரூ.64 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க ரூ.26 கோடி நிதி வழங்கப்படுகிறது. அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க நீலகிரியில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் கொண்டுவரப்படும். சிறந்த அங்கக விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் பெயரில் விருதும் ரூ.5 லட்சம் பணமும் வழங்கப்படும். கம்பு, குதிரைவாலி போன்ற பயிர்களை அதிகமாக விளைவிக்கும் விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.
இலவச மரக்கன்றுகள்
75 லட்சம் செம்மரம், சந்தனம், தேக்கு, ஈட்டி போன்ற உயர்மதிப்புள்ள மரக்கன்றுகள் முழு மானியத்துடன் இலவசமாக வழங்கப்படும். இந்த மரங்களை வெட்டுவதற்கான வழிமுறைகளை எளிமையாக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு மத்திய மாநில அரசுகளின் நிதி பங்களிப்புடன் ரூ.15 கோடி இத்திட்டத்திற்காக ஒதுதக்கப்படும். 2,504 கிராம பஞ்சாயத்துகள் தோறும் 300 குடும்பங்கள் வீதம் 15 லட்சம் தென்னங்கன்றுகள் இலவசமாக வழங்கப்படும்.
பண்ணைச் சுற்றுலா
பள்ளி மாணவ, மாணவிகளிடம் விவசாயம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படும் வகையில் பண்ணை சுற்றுலா அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திற்கு நிரந்தர மூலதன வைப்பு நிதியாக ரூ.100 கோடி வழங்கப்படும். ரூ.5 கோடி செலவில் கோவை தாவரவியல் பூங்காவை சீரமைக்கப்படும்.
8 ஆண்டுகளில் 5931 ஐடி ரெய்டுகளில் ரூ.8,800 கோடி பறிமுதல்! மத்திய அரசு