8 ஆண்டுகளில் 5931 ஐடி ரெய்டுகளில் ரூ.8,800 கோடி பறிமுதல்! மத்திய அரசு
2014 முதல் 2022 வரை நடத்தப்பட்ட வருமான வரி சோதனைகள் மூலம் 8,800 கோடி ரூபாய்க்கு மேல் மதிக்கத்தக்க சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
2014-15ஆம் ஆண்டு முதல் 2021-22 வரையான எட்டு ஆண்டுகளில் நாடு முழுவதும் 5,931 வருமான வரி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் அவற்றின் மூலம் ரூ.8,800 கோடிக்கும் மேல் மதிப்புடைய சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
திங்கட்கிழமை நாடாளுமன்ற மக்களவையில் கேள்விக்கு ஒன்றுக்குப் பதில் அளித்த நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி, கறுப்பு பண சட்டத்தின் கீழ் 13,500 கோடி ரூபாய்க்கு மேல் வரிக்கோரிக்கைகள் எழுப்பப்பட்டுள்ளன. 2015ஆம் ஆண்டு சட்டம் இயற்றப்பட்டதில் இருந்து இதுவரை 350 வழக்குகளில் கோரிக்கை வந்துள்ளன என்று கூறியுள்ளார்.
மேலும், 4,164 கோடி ரூபாய் மதிப்புள்ள கணக்கில் வராத வெளிநாட்டு சொத்துக்கள் சம்பந்தப்பட்ட 648 வழக்குகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து அபராதம் மற்றும் வரி சேர்த்து ரூ.2,476 கோடி வருவாய் அரசுக்குக் கிடைத்துள்ளது எனவும் அமைச்சர் கூறினார்.
குஜராத்தில் 7 விநாடியில் தடைமட்டமான பிரம்மாண்ட குளிரூட்டும் கோபுரம்!
ஏடிஎம்களில் 2000 ரூபாய் நோட்டுகளை வைக்கலாமா வேண்டாமா என்பது பற்றி வங்கிகளுக்கு எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை எனவும் மத்திய இணை அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இதுபற்றிப் பேசுகையில், வங்கிகள் தங்களது ஏடிஎம் மையங்களில் உள்ள பணம் வழங்கும் இயந்திரங்களில் 2000 ரூபாய் நோட்டுகளை நிரப்பாதது பற்றி எந்த அறிவுறுத்தலும் வழங்கவில்லை என உறுதிபடுத்தினார்.
கடந்தகால பயன்பாடு, நுகர்வோரின் தேவை, அவ்ப்போதைய போக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில்தான் ஏடிஎம் மையங்களில் உள்ள பணம் வழங்கும் இயந்திரங்களில் ரூபாய் நோட்டுகள் நிரப்பப்படுகின்றன. இதை வங்கிகள் தாமாகவே செய்துவருகின்றன என்று தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையை மேற்கோள் காட்டி, 2019-20 ஆம் ஆண்டிலிருந்து 2000 ரூபாய் நோட்டுகள் புதிதாக புழக்கத்தில் விடப்படவில்லை என்றும் அவர் கூறினார். 2016ஆம் ஆண்டு பழைய 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து 2000 ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியது.
இலங்கைக்கு 3 பில்லியன் கடன்! IMF ஒப்புதல் அளித்ததை கொண்டாடி மகிழும் பொதுமக்கள்