உடனே ஒரு லட்சம் தேவையா? தனிநபர் கடனுக்கு குறைந்த வட்டி கொடுக்கும் வங்கிகள்
ஒரு லட்சம் ரூபாய் தனிநபர் கடனுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வட்டி விகிதம் எவ்வளவு வசூலிக்கின்றன, செயலாக்கக் கட்டணம் எவ்வளவு என்று பார்க்கலாம்.
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவின் 1 லட்சம் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு 9.3 சதவீதத்தில் இருந்து 13.4 சதவீதம் வரை மாறுபடும். வழங்கப்படும் வட்டி விகிதத்தைப் பொறுத்து, EMI ரூ.2090 முதல் ரூ.2296 வரை இருக்கலாம். யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா கடன் தொகைக்கு 0.5 சதவீத செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கிறது.
பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா
பேங்க் ஆஃப் மகாராஷ்டிராவில் 1 லட்சம் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு 9.5 சதவீதத்திலிருந்து 12.8 சதவீதம் வரை உள்ளது. வழங்கப்படும் விகிதத்தைப் பொறுத்து, EMI ரூ.2100 முதல் ரூ.2265 வரை இருக்கலாம். ஜிஎஸ்டியைத் தவிர்த்து கடன் தொகையின் 1 சதவீத செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கிறது.
இந்தியன் வங்கி
இந்தியன் வங்கியின் 1 லட்சம் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு 10 சதவீதம் முதல் 12.4 சதவீதம் வரை உள்ளது. வழங்கப்படும் விகிதத்தைப் பொறுத்து, EMI ரூ. 2125 முதல் ரூ.2245 வரை இருக்கலாம். இந்தியன் வங்கி கடன் தொகையின் 1 சதவீத செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கிறது. அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களிடம் இருந்து எந்த செயலாக்கக் கட்டணத்தையும் வங்கி வசூலிக்கவில்லை.
பேங்க் ஆஃப் இந்தியா
பேங்க் ஆப் இந்தியாவில் 1 லட்சம் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு 10.35 சதவீதம் முதல் 14.85 சதவீதம் வரை உள்ளது. வழங்கப்படும் விகிதத்தைப் பொறுத்து, EMI ரூ.2142 முதல் ரூ.2371 வரை இருக்கலாம். பாங்க் ஆஃப் இந்தியா கடன் தொகையின் 2 சதவீத செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கிறது.
ஹெச்டிஎப்சி வங்கி
ஹெச்டிஎப்சி வங்கியின் 1 லட்சம் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு 10.35 சதவீதம் முதல் 21 சதவீதம் வரை உள்ளது. வழங்கப்படும் விகிதத்தைப் பொறுத்து, EMI ரூ.2142 முதல் ரூ.2705 வரை இருக்கலாம். ஹெச்டிஎப்சி வங்கி கடன் தொகையின் 2.5 சதவீத செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கிறது.
ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கியின் 1 லட்சம் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு 10.49 சதவீதம் முதல் 13.65 சதவீதம் வரை உள்ளது. வழங்கப்படும் விகிதத்தைப் பொறுத்து, EMI ரூ.2149 முதல் ரூ.2309 வரை இருக்கலாம்.
கத்தோலிக்க சிரியன் வங்கி
கத்தோலிக்க சிரியன் வங்கியின் 1 லட்சம் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு 10.49 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை உள்ளது. வழங்கப்படும் விகிதத்தைப் பொறுத்து, EMI ரூ.2149 முதல் ரூ.2877 வரை இருக்கலாம். கத்தோலிக் சிரியன் வங்கி கடன் தொகையின் 1 சதவீத செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கிறது.
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி
ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 1 லட்சம் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு 10.49 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை உள்ளது. வழங்கப்படும் விகிதத்தைப் பொறுத்து, இஎம்ஐ ரூ.2149 முதல் ரூ.2877 வரை இருக்கலாம். ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் கடன் தொகையில் 3.5 சதவீதம் செயல்முறைக் கட்டணத்தை வசூலிக்கிறது.
ஐசிஐசிஐ வங்கி
ஐசிஐசிஐ வங்கியில் 10.75 சதவீதம் முதல் 19 சதவீதம் வரை வட்டி விகிதம் உள்ளது. வழங்கப்படும் விகிதத்தைப் பொறுத்து, EMI ரூ.2162 முதல் ரூ.2594 வரை இருக்கலாம். ஐசிஐசிஐ வங்கி கடன் தொகையில் 2.5 சதவீதம் செயல்முறைக் கட்டணத்தை வசூலிக்கிறது.
பேங்க் ஆஃப் பரோடா
முன்னணி பொதுத்துறை வங்கியான பேங்க் ஆஃப் பரோடாவில் 10.9 சதவீதம் முதல் 18.25 சதவீதம் வரை வட்டி விகிதம் உள்ளது. செயலாக்க கட்டணம் 1 சதவிகிதம் முதல் 2 சதவிகிதம் மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கிறது.
ஐடிபிஐ வங்கி
ஐடிபிஐ வங்கியின் தனிநபர் கடனுக்கான வட்டி விகிதம் 11 சதவீதத்தில் இருந்து 15.45 சதவீதமாக உள்ளது. வங்கி கடன் தொகையில் 1 சதவீதத்தை செயலாக்க கட்டணமாக வசூலிக்கிறது. EMI ரூ.2174 முதல் ரூ.2405 வரை மாறுபடும்.
ஸ்டேட் பேங்க்
ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் தனிநபர் கடனைப் பெற விரும்பினால், 11 சதவீதத்திலிருந்து 14 சதவீத வட்டி விகிதம் செலுத்த வேண்டும். 5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் கடன் தொகைக்கு EMI ரூ.2174 முதல் ரூ.2327 வரை மாறுபடும். வங்கி கடன் தொகையில் 1.5 சதவீதத்தை செயலாக்க கட்டணமாக வசூலிக்கிறது.
பஞ்சாப் சிந்து வங்கி
பஞ்சாப் சிந்து வங்கியில் 1 லட்ச ரூபாய் தனிநபர் கடனுக்கு 5 ஆண்டுகளுக்கு 11.15 சதவிகிதம் முதல் 12.75 சதவிகிதம் வரையிலான வட்டி விகிதம் உள்ளது. EMI ரூ.2182 முதல் ரூ.2263 வரை செலுத்த வேண்டும். வங்கியும் 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை செயலாக்கக் கட்டணமாக வசூலிக்கிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கியின் 1 லட்சம் கடன் தொகைக்கான வட்டி விகிதம் 5 ஆண்டுகளுக்கு 11.4 சதவீதம் முதல் 16.25 சதவீதம் வரை உள்ளது. வழங்கப்படும் விகிதத்தைப் பொறுத்து, EMI ரூ.2194 முதல் ரூ.2445 வரை இருக்கலாம். பஞ்சாப் நேஷனல் வங்கி கடன் தொகையின் 1 சதவீத செயலாக்கக் கட்டணத்தை வசூலிக்கிறது. பாதுகாப்பு ஊழியர்ககளுக்கு செயலாக்கக் கட்டணம் கிடையாது.