வேலூர்

சிம் கார்டு இல்லாமல் செல்போனில் பேசும் சேவையை பி.எஸ்.என்.எல் தொலைத் தொடர்பு மையம் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த சேவை வரும் 25-ஆம் தேதி முதல் தமிழகத்தில் அமல்படுத்தப்பட உள்ளது என்று வேலூர் மண்டலத்தின் பி.எஸ்.என்.எல் பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

இந்தச் சேவையை பெறுவதற்கு WWW.SANCHARAADHAAR.BSNL.CO.IN/WINGS/LOGIN.ID என்ற இணையதள முகவரியின் மூலம் முன்பதிவு செய்யலாம். இந்த சேவையை தமிழகத்தில் வரும் 25-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும்" என்று அவர் தெரிவித்தார்.