Asianet News TamilAsianet News Tamil

வரும் சனிக்கிழமை இந்த மாவட்ட பள்ளிகள் மட்டும் செயல்படும்... அறிவித்தது தமிழக பள்ளிக்கல்வித்துறை!!

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 26ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 

four district schools will function next saturday announced tn school education dept
Author
Tamilnadu, First Published Aug 23, 2022, 9:01 PM IST

செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்ட பள்ளிகளுக்கு அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 26ம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. முன்னதாக சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெற்றது. வெறும் 4 மாதங்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழக அரசு மிகச்சிறப்பாக செய்திருந்தது.

இதையும் படிங்க: கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்கள்... செப். 6 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது இலங்கை நீதிமன்றம்!!

மேலும் செஸ் ஒலிம்பியாட்டை வெற்றிகரமாக நடத்தியும் முடித்துள்ளது தமிழக அரசு. உலகம் முழுவதும் 186 நாடுகளை சேர்ந்த 2500 வீரர், வீராங்கனைகளுக்கும் தங்கும் வசதிகளை ஏற்படுத்தி கொடுத்து, அவரவர் நாட்டு உணவுகளை சமைத்து கொடுத்து சிறப்பாக உபசரித்து, சர்வதேசத்தையே தமிழக அரசு வியக்க வைத்துள்ளது. சர்வதேச வீரர்கள், வீராங்கனைகள் அனைவரும் தமிழக அரசின் ஏற்பாடுகளையும், உபசரிப்பையும் மெச்சினர்.

இதையும் படிங்க: ஸ்டாலின் குடும்பத்திற்கு பல நூறு ஏக்கர் நிலம்.. கோவை வெள்ளலூர் பேருந்து நிலையத்தை இடம் மாற்ற முயற்சி.. இபிஎஸ்

உலகமே தமிழகத்தை வியந்து பார்த்தது. இந்த போட்டிக்காக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் அதனை ஈடுசெய்யும் வகையில் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி சனிக்கிழமை பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. அதன்படி வரும் 26 ஆம் தேதி சனிக்கிழமை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.  

Follow Us:
Download App:
  • android
  • ios