கன மழையால் பொதுமக்கள் பாதிப்பு...! சிறப்பு அதிகாரிகளை நியமிக்காதது ஏன்..? திமுக அரசை சீண்டிய ஆர்.பி.உதயகுமார்

வெள்ளம் வருகின்ற இடங்களில் இளைஞர்கள் செல்பி மோகத்தால் புகைப்படம் எடுத்து வருகின்றனர். இது போன்ற காலங்களில் காவல்துறையும், வருவாய்த் துறையும் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

Former minister RB Udayakumar has requested that special officers should be appointed to repair the damage caused by heavy rains

மழை , வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு

தமிழகத்தில்  தற்போது கன மழை பெய்து வருகிறது, கர்நாடகா மாநிலத்திலும்  மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விடுவதால் தமிழகத்திற்கு அதிகளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.  இதனால் ஒகேனக்கல்  அருவியில் வரலாறுகாணாத வகையில் தண்ணீர் சீறிப்பாய்ந்து கொண்டு வருகிறது.  மேட்டூரில் 120 அடியை எட்டி  நீர் வெளியேறி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.  காவிரி நீர்  செல்லும் 10 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  அதனைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் 14 மாவட்ட ஆட்சித் தலைவருடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளார்.  இது போதாது என்று கேள்வி எழுந்துள்ளது. கடந்த எடப்பாடியார் ஆட்சியில் இது போன்ற காலங்களில் அனுபவம் வாய்ந்த மூத்த ஆட்சி தலைவர்களை கண்காணிப்பு அலுவலக நியமனம் செய்யப்பட்டது. அவர்கள் அந்த மாவட்ட ஆட்சி தலைவருக்கு தொடர் வழிகாட்டுதலை,அறிவுரை வழங்கி வருவார்கள் தற்பொழுது பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் குறித்து அறிவிப்பு வெளிவரவில்லை, அப்படி நியமித்திருந்தால் யார் யார் எந்த மாவட்டங்கள் என்று இருந்தால் மக்கள் தங்கள் தேவைகளை குறைகளை சொல்ல எளிதாக இருக்கும்.   

Former minister RB Udayakumar has requested that special officers should be appointed to repair the damage caused by heavy rains

சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டார்களா?

ஏற்கனவே அம்மா ஆட்சி காலத்தில் வருவாய் துறை சார்பில் 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி இருந்தது. அதன் மூலம் மக்கள் குறைகளை சுட்டி காட்டினார்கள், அதுமட்டுமல்ல தாழ்வான பகுதியில் உள்ளவர்களை முகாம்களுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு மருத்துவ வசதி சுகாதார வசதி குழந்தைகளுக்கு பால் பவுடர் ஆகியவற்றை வழங்கி வந்தன 24 × 7 என்ற அடிப்படையில் உபரி நீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது தற்போது இதே போல் செயல்படுத்த வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர் என கூறியுள்ளார். மேலும் தற்பொழுது வெள்ளம் வருகின்ற இடங்களில் இளைஞர்கள் செல்பி மோகத்தால் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.  இது போன்ற காலங்களில் காவல்துறையும், வருவாய்த் துறையும் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும்.  மேலும் தரைப்பாலங்களில் இரண்டு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் கடந்து செல்ல முயற்சி செய்யும் பொழுது சில நேரங்களில் அடுத்து செல்லப்படுகிறது. 

உஷார் மக்களே!! கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. ஆற்றில் குளிக்கவும் செல்பி எடுக்கவும் தடை..

Former minister RB Udayakumar has requested that special officers should be appointed to repair the damage caused by heavy rains

24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்

அதேபோல் 24 நேரமும் கரையோரங்களை கண்காணித்து வரவேண்டும்.  அதேபோல் ஆடு,மாடுகளை குளிப்பாட்ட அனுமதிக்க கூடாது.   ஆடி மாதங்களில் ஆற்றுக்கரையோரங்களில் பாரம்பரியம் மிக்க கடமை செய்ய மக்கள் கூடுவது வழக்கம், அதுபோன்ற நேரங்களில் மக்களின் மனதை புண்படுத்தாமல் அவர்களுக்கு எடுத்து சொல்லிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். மேலும்  குறிப்பாக சிறுவர்கள் தண்ணீர் அருகில் செல்வார்கள் அவர்களை எச்சரிக்கையுடன் கண்காணித்தல் வேண்டும். எனவே இது போன்ற  உரிய நடவடிக்கை எடுத்து  இந்த பேரிடர்காலங்களில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படாமல் அரசு மீட்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஆறுகளில் வெள்ளப்பெருக்கு.. பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட்.. அருவிகளில் குளிக்க 3 வது நாளாக தடை..

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios