ஆறுகளில் வெள்ளப்பெருக்கு.. பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட்.. அருவிகளில் குளிக்க 3 வது நாளாக தடை..
தென்மேற்கு பருவமழை காரணமாக தேனி மாவட்டம், கம்பம், கூடலூர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சுருளிமலையில் பெய்து வரும் மழை காரணமாக, அருவியில் நீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது. மேலும் அருவியின் நீர்வரத்து ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தென்மேற்கு பருவமழை காரணமாக தேனி மாவட்டம், கம்பம், கூடலூர் பகுதிகளில் கடந்த சில நாள்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சுருளிமலையில் பெய்து வரும் மழை காரணமாக, அருவியில் நீர் ஆர்பரித்துக் கொட்டுகிறது. மேலும் அருவியின் நீர்வரத்து ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் சுருளி அருவியில் குளிக்க மூன்றாவது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தொடர் மழை காரணமாக சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகை குறைந்துள்ளது. முல்லைப் பெரியாறு அணையில் நீர்பிடிப்பு பகுதியில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது. மேலும் பெரியாறு, தேக்கடி ஏரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க:உஷார் மக்களே!! கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. ஆற்றில் குளிக்கவும் செல்பி எடுக்கவும் தடை..
இதனிடையே கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் மழைகாரணமாக காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கர்நாடக அணையிலிருந்து தமிழகத்திற்கு அதிக அளவில் உபரி நீர் திறந்துவிடப்படுகிறது. தமிழக எல்லை பகுதியான பீலிகுண்டலுக்கு வினாடிக்கு 2 லட்சம் கன அடி வந்துக்கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை தனது முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர் அப்படியே ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
இதனால கரையோர மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குடியிருப்பு பகுதிகளை சுற்றி தீவு போல வெள்ளநீர் சூழந்துள்ளதால், மக்கள் அவதியடைந்துள்ளனர். தொடர் கனமழை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, பல்வேறு மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் 14 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும் படிக்க:மேட்டூர் அணையில் இருந்து 2 லட்சம் கன அடி நீர் திறப்பு.! காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு..பொதுமக்கள் வெளியேற்றம்