aiadmk: நெருங்கும் தேர்தல்.. அதிமுகவில் திடீரென ரீ என்ட்ரி கொடுத்த முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில்..!
கடந்த 2016ம் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக நிலோபர் கபில் தேர்வானார். இதனையடுத்து இவருக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
கடந்த 2021ம் ஆண்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் கே.சி. வீரமணி முன்னிலையில் மீண்டும் அக்கட்சியில் இணைந்தார்.
கடந்த 2016ம் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக நிலோபர் கபில் தேர்வானார். இதனையடுத்து இவருக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனையடுத்து 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. அப்போது திருப்பத்தூர் அதிமுக மாவட்டச் செயலாளராக இருக்கும் கே.சி.வீரமணி திட்டமிட்டே தனக்கு சீட் தரக்கூடாது என கட்சி தலைமைக்கு தெரிவித்ததாக குற்றம்சாட்டினார்.
இதையும் படிங்க: இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இதெல்லா இது வேறயா? ஓபிஎஸ் இனிசியலுடன் கூடிய ஓ.பன்னீர்செல்வம் போட்டி.!
மேலும், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கும், கே.சி.வீரமணிக்கு ரகசிய உடன்பாடு உள்ளதாகவும் கூறியிருந்ததார். இதனையடுத்து கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினால் முன்னாள் அமைச்சர் நிலோபர் கபில் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.
இதையும் படிங்க: தேனியில் தங்க தமிழ்ச்செல்வன் மட்டும் ஜெயிக்கலனா அடுத்த நாளே அமைச்சர் பதவி ராஜினாமா.. மூர்த்தி ஆவேசம்!
இந்நிலையில் மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலோபர் கபில் வாணியம்பாடியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணியிடம் மன்னிப்பு கடிதம் கொடுத்து மீண்டும் அக்கட்சியில் இணைந்தார்.