வனப்பகுதியை 33% விரிவாக்கம் செய்ய அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், மொழியை காப்பாற்றும் எண்ணத்துடன் பல்வேறு முயற்சியை தமிழக அரசு எடுத்து வருவதாகவும், அதனை உறுதிப்படுத்தும் விதமாக பேச்சு வழக்கில் இருந்து வந்த படுக இன மக்களின் மொழியை பல ஆண்டுகள் போராட்டத்திற்கு பின்பு தமிழில் மொழி பெயர்த்து 14ஆயிரம் வார்த்தைகள் அடங்கிய அகராதியை முதலமைச்சர் வெளியிட்டார். இது அப்பகுதியில் பயிலும் இளைஞர்களுக்கு மிகுந்த உறுதுணையாக இருக்கும். 

தனுஷை ஒன்றும் செய்துவிடாதீர்கள்; ஏமாற்றிய காதலனுக்காக வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை

படுக மொழியில் உள்ள சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் வார்த்தைகளில் 14 ஆயிரம் சொற்களை மொழி பெயர்த்துள்ளோம் என தெரிவித்தார். மேலும், மக்கள் தொகை அதிகமான காரணத்தினால், விலங்குகளின் இருப்பிடத்தை நோக்கி நகரத் தொடங்கியுள்ளனர். 

முதல்வரின் முதுகில் குத்துகிறார் தமிழிசை - நாராயணசாமி காட்டம்

அதனால் விலங்குகளுக்கு அச்சுருத்தல் இருப்பதை கட்டுப்படுத்தும் விதமாக வனப்பகுதியில் கால்வாய், தொங்கு வேலி, சோலார் மூலம் கண்காணிப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட வருகிறது. வனப்பகுதியை 33% விரிவாக்கம் செய்ய அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.