புதுச்சேரியை போன்று தெலங்கானா ஆளுநர் மாளிகையில் பொதுமக்களை சந்திக்க ஆளுநர் தமிழிசைக்கு திராணி இருக்கிறதா என்று கேள்வி எழுப்பியுள்ள முன்னாள் முதல்வர் நாராயணசாமி தற்போதைய முதல்வருடன் இணக்கமாக இருப்பதுபோல் காட்டிக்கொண்டு அவரை முதுகில் குத்துவதாக காட்டமாக தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் மாதம் இரு நாட்கள் பொதுமக்களை தனது அலுவலகத்தில் நேரில் சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்க உள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பில் அண்மையில் அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் மாநி முன்னால் முதல்வர் நாராயணசாமி இன்று அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 

தமிழகத்தில் இரண்டாவது முறையாக திமுக தலைவராக ஸ்டாலின் தேர்வு செய்யபட்டதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 2022-ல் அமெரிக்க நாடு 4 முறை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் அமெரிக்கர்கள் இந்தியாவிற்கு செல்லும் போது பாதுகாப்பாக செல்ல வேண்டும். அல்லது இந்தியா செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவிற்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. மதத்தின் பெயரால் மக்களை திசை திருப்பி Rss மூலம் அரசியல் செய்கின்றனர். இதனால் மதக்கலவரம் ஏற்படுகிறது. 

அரசியல் கட்சிகளின் வாக்குறுதிகளை நம்பியதால் நிலத்தை இழந்த விவசாயி கதறல்

மேலும் துணைநிலை ஆளுநர் தமிழிசை எந்த அதிகாரத்தின் அடிப்படையில் மக்களிடம் குறை கேட்கிறார்? புதுச்சேரியை போல் தெலங்கானா ஆளுநர் மாளிகையில் பொதுமக்களை சந்திக்க தமிழிசைக்கு திராணி இருக்கிறதா? அங்கு சந்திரசேகர்ராவ் கட்சியினர் அவரை விரட்டியடிக்கின்றனர். அவரை யாரும் மதிப்பதில்லை என்றார்.

தொடர்ந்து பேசுகையில், துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் புதுச்சேரியில் முதலமைச்சருடன் இணக்கமாக இருப்பது போல் காட்டிவிட்டு அவரை முதுகில் குத்துகிறார். ஆளுநர் இரட்டை ஆட்சி நடத்துகிறார். இதைபற்றி முதலமைச்சர் ரங்கசாமிக்கு எந்த கவலையும் இல்லை. அவருக்கு தேவை முதலமைச்சர் நாற்காலி தான். அதிகாரம் பறி போனாலும் கவலை இல்லை. இதுபோன்ற ஆட்சியை ரங்கசாமி நடத்த வேண்டுமா? என்று கேள்வி எழுப்பினார். 

சாயம் போகாத கட்சி திமுக - அமைச்சர் கே.என்.நேரு

மேலும் உண்மையிலேயே ரங்கசாமிக்கு பதவி ஆசை இல்லையென்றால் ஆளுநர் மக்களை சந்திக்கிறார் என்று தெரிந்ததும் கூட்டணியை விட்டு வெளியேறி இருக்க வேண்டாமா? துணைநிலை ஆளுநர் உடனடியாக மக்களை சந்திப்பதை நிறுத்த வேண்டும். அது ஜனநாயக விரோதம், நீதிமன்ற அவமதிப்பாகும். இந்த ஆட்சி விரைவில் முடிவுக்கு வரும் என அவர் தெரிவித்துள்ளார்.