சாயம் போகாத கட்சி திமுக - அமைச்சர் கே.என்.நேரு
திமுக ஆட்சிக்கு வந்து கடந்த ஒன்றரை ஆண்டுகளில் திருச்சிக்கு மட்டும் ரூ.5 ஆயிரம் கோடியில் திட்டப்பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி மதுரை நெடுஞ்சாலையில் பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகைப் பயன்பாட்டு மையம் சுமார் 349.98 கோடி மதீப்பீடில் கட்டுமானப் பணிகளை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என் நேரு இன்று பஞ்சப்பூரில் துவக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், பஞ்சப்பூரில் இந்த ஒருங்கிணைந்த பேருந்து முனையம் மொத்த மதீப்பீடு 349.98 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் துவங்கி உள்ளது. அடுத்த ஆண்டு நவம்பர் மாதம், அதாவது ஒரே ஆண்டில் பயன்பாட்டுக்கு வரும். திருச்சி அண்ணா சாலை முதல் ஜங்சன் வரை ரூ. 966 கோடி திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது. டெண்டர் விடும் பணிகள் இனி நடைபெற்று உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் துவங்கும்.
தஞ்சை அருகே பரபரப்பு !! கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் தலைக்கீழாக கவிழ்ந்த அரசு பேருந்து..
நகர்பகுதிகளில் சாலை அமைக்கும் திட்டம் மழையின் காரணமாக சில இடங்களில் தாமதம் ஏற்படுவது உண்மை தான். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மழை வெள்ளம் வந்தவுடன் திமுகவின் சாயம் வெளுக்கும் என பேசி வருவகிறார். திமுகவின் சாயமெல்லாம் வெளுக்காது. சாயம் போகாத கட்சி தான் திமுக.
மக்களே உஷார் !! இன்று 8 மாவட்டங்களில் மிக கனமழை.. 22 மாவட்டங்களில் கனமழை.. வானிலை அப்டேட்
நாங்கள் ஆட்சிக்கு வந்து கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் திருச்சிக்கு மட்டும் ரூ.5 ஆயிரம் கோடிக்கு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் பல்வேறு பயன்பாட்டு மையம் கனரக சரக்கு வாகனம் முனையம் ஓராண்டிற்குள் இப்பணிகள் முடிவடையும் என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.