தஞ்சை அருகே பரபரப்பு !! கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் தலைக்கீழாக கவிழ்ந்த அரசு பேருந்து..

சென்னையிலிருந்து தந்தை நோக்கி வந்த அரசு பேருந்து, திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
 

Government bus got accident in Tanjore 20 injured

சென்னையிலிருந்து தந்தை நோக்கி வந்த அரசு பேருந்து, திடீரென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அடுத்த சோழபுரம் அருகே சென்னையிலிருந்து தஞ்சை  நோக்கி வந்துக்கொண்டிருந்த அரசு பேருந்து, கட்டுப்பாடை இழந்து சாலையோரம் இருந்த வாய்க்கால் மதகு கட்டையில் மோதி, அதனை இடித்துக்கொண்டு வாய்க்காலில் தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

மேலும் படிக்க;நாக்கு வெட்டப்படும்..! எச்சரிக்கை விடுத்த மதுரை மாவட்ட பாஜக தலைவர்..! கைது செய்ய தீவிரம் காட்டும் போலீஸ்

இதில் பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஓட்டுநனர், நடத்துடனர் உட்பட பலத்த காயமடைந்த 7 பேர் உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, கும்பகோணம் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சோழபுரம் காவல்துறையினர், இதுக்குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

மேலும் படிக்க;பஸ் ஸ்டாப்பில் வைத்து பள்ளி சீருடையில் 12ம் வகுப்பு மாணவிக்கு தாலி கட்டிய மாணவன்.. வைரல் வீடியோ..!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios