Asianet News TamilAsianet News Tamil

ரயில்வே தேர்வு எழுதுபவர்களுக்கு சூப்பர் நியூஸ்.! தெற்கு ரயில்வே கொடுத்த சர்ப்ரைஸ்.!!

ரயில்வே தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் வசதிக்காக தெற்கு ரெயில்வே 46 ரெயில்களில் கூடுதலாக பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்துள்ளது.

for the convenience of students writing the railway RRB exam Southern Railway has decided to run additional trains on 46 trains
Author
Tamilnadu, First Published May 7, 2022, 9:51 AM IST

ரயில்வே துறையில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே வாரியம் வருகிற 8, 9-ந் தேதிகளில் தேர்வு நடத்துகின்றன. இந்த தேர்வு நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு நகரங்களில் ரயில்வே தேர்வு நடைபெறுகிறது. தேர்வு எழுத செல்லும் தேர்வர்கள் வசதிக்காக ரெயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்க ரயில்வே வாரியம் அனுமதி அளித்துள்ளது.

for the convenience of students writing the railway RRB exam Southern Railway has decided to run additional trains on 46 trains

தேர்வு எழுத செல்பவர்கள் வசதியாக செல்ல தெற்கு ரயில்வே 46 ரயில்களில் கூடுதலாக பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் சார்பில் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது, ‘நாடு முழுவதும் ரயில்வே பணியாளர் தேர்வாணையம் சார்பில் பல்வேறு பணிக்கான எழுத்துத் தேர்வு வரும் 9-ம் தேதி நடக்கிறது. இதற்காக பல்வேறு மாவட்டங்களில் இருந்து தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். மாணவர்களின் வசதிக்காக தேர்வு மையம் உள்ள வழித்தடங்களில் இயங்கும் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டு வருகிறது. 

மேலும், சிறப்பு ரயில்களையும் ரயில்வே நிர்வாகம் அறிவித்து வருகிறது. சேலம் வழியே கொச்சுவேலி-தாம்பரம் சிறப்பு ரயில் நாளை இயக்கப்படுகிறது. இந்நிலையில், சேலம் வழியே மேலும் 2 சிறப்பு ரயில்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மங்களூரு-பெலகாவி சிறப்பு ரயில் (06042), இன்று (7-ம் தேதி) இயக்கப்படுகிறது. மங்களூருவில் இரவு 11 மணிக்கு புறப்படும் இந்த ரயில், காசர்கோடு, பையனூர், கண்ணூர், கோழிக்கோடு, பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியே சேலத்துக்கு மறுநாள் காலை 9.17 மணிக்கு வந்தடைகிறது. 

பின்னர், 3 நிமிடத்தில் புறப்பட்டு பாங்காரூபேட்டை, பனாஸ்வாடி வழியே பெலகாவிக்கு 9-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில்,பெலகாவி-மங்களூரு சிறப்பு ரயில் (06041), வரும் 9-ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு, சேலத்துக்கு அடுத்தநாள் மதியம் 12.10 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், திருப்பூர், ஈரோடு, கோவை வழியே மங்களூருவுக்கு இரவு 10.50 மணிக்கு சென்றடைகிறது. 

இதேபோல், திருநெல்வேலி-மைசூர் சிறப்பு ரயில் (06039) இன்று (7-ம் தேதி) இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இரவு 10.10 மணிக்கு புறப்படும்.  இந்த ரயில், நாகர்கோவில், திருவனந்தபுரம், கொல்லம். ஆலப்புழா, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, கோவை. திருப்பூர், ஈரோடு வழியே சேலத்துக்கு அடுத்தநாள் மதியம் 12 மணிக்கு வந்து சேர்கிறது. பின்னர், 3 நிமிடத்தில் மீண்டும் புறப்பட்டு பெங்களூரு வழியே மைசூருக்கு இரவு 11.55 மணிக்கு சென்றடைகிறது.

மறுமார்க்கத்தில், மைசூர்-திருநெல்வேலி சிறப்பு ரயில் (06040), வரும் 10-ம் தேதி இயக்கப்படுகிறது. மைசூரில் இரவு 8.15 மணிக்கு புறப்படும் இந்த ரயில், சேலத்துக்கு அடுத்தநாள் அதிகாலை 5.30 மணிக்கு வந்தடைகிறது. பின்னர், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு,எர்ணாகுளம், திருவனந்தபுரம், நாகர்கோவில் வழியே திருநெல்வேலிக்கு 12-ம் தேதி இரவு 9.30 மணிக்கு சென்றடைகிறது. இந்த ரயில் சேவைகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று  தெற்கு ரயில்வே வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதையும் படிங்க : தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முன்பு விநாயகர் வாழ்த்து பாடல் - சர்ச்சையில் சிக்கிய வானதி சீனிவாசன் !!

Follow Us:
Download App:
  • android
  • ios