MK STALIN : உச்சக்கட்ட அலர்ட்டில் திருச்சி.. முதல்வருக்கு அதிகரித்த பாதுகாப்பு- டிரோன்கள் பறக்க தடை
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை திருச்சிக்கு செல்லவுள்ள நிலையில், அங்கு ஆளில்லாத விமானம், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மீறி டிரோன்கள் பறக்க விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சிக்கு வரும் ஸ்டாலின்
தமிழகத்தில் கள்ளச்சாராய மரணம், அரசியல் தலைவர்கள அடுத்தடுத்து கொலை சம்பவங்களால் திமுக அரசுக்கு புதிய தலைவலி உருவாகியுள்ளது. சட்டம் ஒழுங்கு தொடர்பாக கேள்வியும் எழுப்பப்பட்டு வருகிறது. இந்தநிலையில் அரசியல் தலைவர்களுக்கான பாதுகாப்பை அதிகரித்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இந்த பரபரப்பான நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் பொன் புதுப்பட்டியில் நடைபெறும் சட்டத்துறை அமைச்சர் எஸ் ரகுபதி இல்லத் திருமண விழாவில் கலந்து கொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் இன்று பிற்பகல் விமானம் மூலம் திருச்சி செல்லவுள்ளார். அங்கு திமுகவினர் சார்பாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படவுள்ளது.
ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்கு பழியா? ஆம்ஸ்ட்ராங்? காவல் ஆணையர் அஸ்ரா கார்க் பரபரப்பு தகவல்!
டிரோன்கள் பறக்க தடை
இதனை தொடர்ந்து கார் மூலம் புதுக்கோட்டை மாவட்டம் பொன். புதுப்பட்டிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் செல்கிறார். அங்கு திருமண நிகழ்வில் கலந்து கொண்ட பின்னர் கார் மூலம் திருச்சி திரும்பி விமானம் மூலம் சென்னைக்கு வரவுள்ளார். இதனால் திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தடையை மீறி ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்களை பறக்கவிட்டால் நடவடிக்கை என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. திருச்சி மாநகரத்தில் சனிக்கிழமை மாலை முதல் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் டிரோன்கள் பறக்க அனுமதி இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.