ஊட்டிக்கு போட்டியாக சென்னையில் மலர் கண்காட்சி.! எப்போது.? கட்டணம் எவ்வளவு தெரியுமா.?

சென்னையில் நான்காவது மலர் கண்காட்சி ஜனவரி 2 முதல் 18 வரை செம்மொழிப் பூங்காவில் நடைபெற உள்ளது. 50 வகையான மலர்கள், 30 லட்சம் மலர்த் தொட்டிகளில் காட்சிப்படுத்தப்படும்.

Flower Show starts today in Chennai How much is the entry fee KAK

இயற்கையும் மக்களும்

இயற்கையை ரசிக்காத மக்களே இல்லை, அந்த வகையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் மலை பகுதிகளுக்கு மக்கள் அதிகம் செல்வார்கள். குழுமையான காற்றில் பச்சை பசையென காட்சியளிக்கும் மரங்களை கண்டு ரசிக்க மக்கள் ஊட்டி, கொடைக்கானல் போன்ற இடங்களுக்கு கூட்டம் கூட்டமாக படையெடுப்பார்கள். அங்கு அழகாக காட்சியளிக்கும் இடங்கள், பூத்து குலுங்கும் மலர்கள் என கண்டு ரசிப்பார்கள். அந்த வகையில் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் கோடை காலமான மே மாதம் மலர் கண்காட்சி ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நடத்தப்படும். அங்கு பல வண்ணங்களில் பூக்கள் அழகுபடுத்தப்படும். அதனை பார்ப்பதற்காகவே பல லட்சம் மக்கள் செல்வார்கள்.

மலர் கண்காட்சி

இந்த நிலையில் இதே போன்ற மலர் கண்காட்சி சென்னையில் நடத்தப்படுகிறது. வேளாண்மை - உழவர் நலத் துறையின் கீழ் செயல்படும் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள 4ஆவது சென்னை மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு க ஸ்டாலின் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்கி வைத்து,  பார்வையிடுகிறார். சென்னை மக்களை கவரும் வகையில் 2022 ஆம் ஆண்டு முதல் சென்னையில் மலர் காட்சி மிகுந்த வரவேற்புடன் நடத்தப்பட்டு வருகிறது. தோட்டக்கலை பயிர்களின் வளத்தையும் வளர்ச்சியையும் பிரதிபலிக்கும் நோக்கில் கடந்த மூன்று மலர் காட்சிகள் இத்துறையால் நடத்தப்பட்டுள்ளது.

 சென்னையில் மலர் கண்காட்சி

இம்மலர்காட்சிகளை ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட்டுள்ளனர். காலையில் இருந்து மாலைவரை சென்னையில் நடைபெற்ற இக்காட்சிகளை பெரியவர்கள், பள்ளிச் சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் சிறுகுழந்தைகள் என அனைவருமே பார்வையிட்டு மகிழ்ந்துள்ளார்கள். இந்த மலர் கண்காட்சியில்  அரிய வகை மலர்கள் பல்வேறு வடிவ அமைப்புகளில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. தற்போது நான்காவது சென்னை மலர் காட்சி 2025 ஜனவரி 2ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இக்காட்சிக்கு 50 வகையிலான மலர்கள் 30 இலட்சம் மலர்த் தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. 

கட்டணம் எவ்வளவு.?

இக்காட்சியில் யானை, மயில், இரயில், தேனீர் கப், ஆமை, படகு, வண்ணத்துப் பூச்சி, இதயம், அன்னப்பறவை. நடன மங்கைகள், ஐஸ் கிரீம், ஜீப் போன்ற 20 வகையான வடிவங்களில் பல்வேறு வண்ண மலர் தொட்டிகளில் காட்சிப்படுத்தப்பட உள்ளது. இம்மலர்காட்சி 2025 ஜனவரி 2 அன்று துவங்கப்பட்டு இரண்டு வாரங்களுக்கு நடைபெற உள்ளது . https://tnhorticulture.in/spetickets/  நுழைவுச்சீட்டு செம்மொழிப் பூங்காவிலும் பொதுமக்கள் பெற்றுக் கொள்ளலாம். ஜனவரி 2ஆம் தேதி முதல் ஜனவரி 18ஆம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறும். இதனால் மக்கள் இந்த நேரங்களில் செம்மொழி பூங்காவிற்கு வந்து பூத்துக் குலுங்கும் மலர்க் கண்காட்சியை பார்த்து ரசிக்கலாம். இதற்கு கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.150, சிறியவர்களுக்கு ரூ.75 வசூலிக்கப்படுகிறது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios