Five persons arrested for try to steal temple kalasam

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் உள்ள ஐயனார் கோயில் கலசத்தை திருட திட்டம்போட்டு வந்து வேவு பார்த்த ஐந்து பேரை காவலாளர்கள் அதிரடியாக கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள புல்வயலை அடுத்த நெரிகிப்பட்டியில் பழமை வாய்ந்த நெருகி ஐயனார் கோயில் ஒன்று உள்ளது. 

இந்தக் கோயிலில் நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த மாடசாமி உள்பட நால்வர் சேர்ந்து கோயிலில் சாமி கும்பிட வந்துள்ளனர். அவர்களுக்கு கோயில் பூசாரி சின்னத்தம்பி விபூதி வழங்கியுள்ளார். 

அதன்பின்னர் அவர்களிடம் யார் என விசாரித்தபோது அவர்கள் விறகு வாங்க வந்ததாக கூறியுள்ளனர். அதன்பின்னர் அவர்கள் உள்ளூரைச் சேர்ந்த அழகேந்திரன் (29) மற்றும் சரவணன் ஆகியோர் கோவிலை சுற்றி வந்துள்ளனர். இதனால் அப்பகுதியில் உள்ள சிலருக்கு சந்தேகம் வந்தது.

இதனையடுத்து மாடசாமி மற்றும் அழகேந்திரன் நடவடிக்கையில் சந்தேகமடைந்த பொதுமக்கள் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். 

இதில் அவர்கள் கோயில் கலசத்தை திருட வந்தது தெரியவந்தது. இந்த விஷயம் மற்ற நான்கு பேருக்கும் தெரிந்து அங்கிருந்து தப்பித்து அலங்காநல்லூர் சென்றுவிட்டனர்.

இதுகுறித்து பொதுமக்கள் உடனடியாக அன்னவாசல் காவலாளர்களுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பின்பு சம்பவ இடத்திற்கு வந்த காவலாளர்கள் அவர்கள் இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர். 

இதையடுத்து மற்ற நாலவரும் மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இருப்பதை உறுதி செய்தனர். பின்னர் அங்கு சென்ற காவலாளர்கள் கோவில்பட்டியை கருப்பையா (42) வெள்ளியகுன்றம் சக்திவேல் (57) இடையப்பட்டி செல்வம் (46) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 

இதில் புல்வயலை சேர்ந்த சரவணன் மட்டும் தப்பி சென்று விட்டார். அவரை காவாலாளர்கள் தீவிரமாக தேடி வருகின்றனர்.