Asianet News TamilAsianet News Tamil

டெங்கு காய்ச்சலுக்கு மீனவர் பலி - மாநிலம் முழுவதும் மக்கள் பீதி!

fisherman died of dengue
fisherman died of dengue
Author
First Published Aug 17, 2017, 12:46 PM IST


டெங்கு காயச்சல் பாதிப்பால், ராமேஸ்வரம் அடுத்த ஏரகாடு கிராமத்தை சேர்ந்த மீனவர் பரிதாபமாக பலியானார்.

ராமேஸ்வரம் அருகே ஏரகாடு மீனவ கிராமத்தில் ஏராளமான மீனவர்கள் வசிக்கின்றனர். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மகன் வெங்கடேஷ்வரன் (23). மீனவர். இவருக்கு புற்று நோய் ஏற்பட்டு, பாதிக்கப்பட்டு இருந்தார்.

இதையடுத்து, வெங்கடேஷ்வரன், ராமநாதபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு, கடந்த 4 மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் வெங்கடேஷ்வரனுக்கு, கடந்த மாதம் திடீரென டெங்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து காய்ச்சலுக்கும் சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு குணமடைந்த பின்னர், அவர் வீடு திரும்பினார். இதை தொடர்ந்து வீட்டில் இருந்தபடியே வெங்கடேஷ்வரன் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்நிலையில், நேற்று இரவு வெங்கடேஷ்வரன், வீட்டில் திடீரென மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிச்சியடைந்த குடும்பத்தினர், உடனடியாக அவரை மீட்டு ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், வெங்கடேஷ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இதன் பின் உயிரிழந்த வெங்கடேஷ்வரன் டெங்குக் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்து கொண்ட விவரத்தினை டாக்டர்கள், குடும்பத்தினர் மூலம் அறிந்து கொண்டனர். இதையடுத்து, பிரேத பரிசோதனை செய்த பின் சடலம் ஒப்படைக்கப்படும் என டாக்டர்கள் கூறியுள்ளனர்.

இதற்கிடையில்  போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios