ஆண்களுக்கு நிகராக எல்லா துறைகளிலும் பெண்கள் வந்து விட்டார்கள். அதிலும் ஒரு சில துறைகளில் பெண்கள் மிக குறைவாக இருந்தாலும், நாளுக்கு நாள் எல்லா துறைகளிலும் பெண்களின் ஈடுபாடு அதிகரித்துக்கொண்டே தான் செல்கிறது.

அந்த வகையில், கல்பனா சாவ்லா போன்ற விண்வெளி வீராங்கனை முதல், ஆம்புலன்ஸ் ஓட்டும் அளவிற்கு திறமையான பெண்கள் நம் இந்தியாவையே பெருமை படுத்தி வருகிறார்கள். அதற்கெல்லாம் உதாரணமாக இன்று, தமிழகத்தில் முதல் முதலாக ஒரு பெண் பலரது உயிரை அவரச நிலையில் காக்கும் ஆம்புலன்ஸசை இயக்கிகுகிறார் என்றால் எந்த அளவிற்கு திறமை வாய்ந்தவராக இருப்பார் என்பதை நீங்களே நினைத்து  பாருங்கள்.

மேலும் இதன் மூலம் தமிழகத்திலேயே ஆம்புலன்ஸை இயக்கும் முதல் பெண்மணி என்கிற பெருமையை பெற்றிருக்கிறார். உயர்ந்த சேவைகளில் ஒன்றாக கருதப்படும், இந்த வேலையை தேர்வு செய்து...தற்போது இந்த பணியை மேற்கொண்டு வரும் இந்த பெண்ணிற்கு தமிழகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

ஆண்களுக்கு நிகராக சபரிமலை தான் ஏற வேண்டுமா என்ன? இப்படி உயிர் காக்கும் சேவைகளில் கூட பெண்கள் தங்களை ஈடுபடுத்தி கொள்ளலாம் என சமூக வலைத்தளத்தில் பரவலாக ஒரு கருத்து பரவி வருகிறது.