Firefighters are trying hard to put off the fire after the sudden incident of Indian Oil Company near Pudukottai.

புதுக்கோட்டை அருகே இந்தியன் ஆயில் நிறுவன கிணற்றில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதையடுத்து தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் முயற்சி செய்து வருகின்றனர். 

கும்பகோணம் அருகே உள்ள கதிராமங்கலத்தில் ஓ.என்.ஜி.சி அமைத்த குழாயில் இருந்து திடீரென கச்சா எண்ணெய் வெளியேறியதால் பொதுமக்கள் அச்சமைடைந்தனர்.

இதனால் அப்பகுதி மக்கள் ஒஎன்ஜிசி நிறுவனத்திற்கு எதிராகவும் எண்ணெய் குழாயை அகற்ற கோரியும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டுவர்கள் மீது தடியடி நடத்தி 10 க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதை கண்டித்து அப்பகுதி மக்கள் கடந்த பல்வேறு நாட்கள் போராடி அவர்களுக்கு ஜாமின் கிடைத்தது. 
இதைதொடர்ந்து தமிழகத்தில் பதிக்கப்படும் பல்வேறு இடங்களில் ஒஎன் ஜிசிக்கு எதிராக பொதுமக்கள் போராடி வருகின்றனர். 

இந்நிலையில், புதுக்கோட்டை அருகே நல்லாண்டார்கொல்லையில் அமைக்கப்பட்டு உள்ள ஓஎன்ஜிசி குழாயில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கிணற்றில் எரியும் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.