Asianet News TamilAsianet News Tamil

ஐஸ் ஹவுஸ் காவல் நிலையம் எரிப்பு -திருவல்லிக்கேணியில் பதற்றம்

fire the-ice-house-police-station
Author
First Published Jan 23, 2017, 1:49 PM IST


ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக எழுச்சியுடன் திரண்ட இளைஞர்கள் கடந்த 6 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். லட்சக்கணக்கில் இருந்த போராட்டக்காரர்கள் நேற்றிரவு முதல் கலைய துவங்கினர். 

மத்திய மாநில அரசுகள் இணைந்து அவசர சட்டத்தை கொண்டு வந்த நிலையிலும் கலையாமல் பிடிவாதத்துடன் இருந்த போராட்டக்காரர்களுக்கு பல மட்டத்திலும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 

உண்மையான இளைஞர்களிடையே பல அமைப்புகள் கலந்துவிட்டன ஆகையால் ஜல்லிக்கட்டு போராட்டக்காரர்கள் கலைந்து செல்லுங்கள் மற்றவர்கள் பற்றி நாங்கள் ஒன்றும் சொல்வதற்கில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

இதனிடையே நேற்றிரவு முதல் விடிய விடிய பலர் கலைந்து செல்ல துவங்கினர். பலர் கலையாமல் கடலைநோக்கி சென்றனர்.

அவர்களுக்கு ஆதரவாக நொச்சிக்குப்பம் மீனவர்களும் கலந்துகொண்டனர். சுமார் 3 ஆயிரம் பேருக்கு மேல் திரண்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். கடலுக்குள் இறங்கி போராட்டம் நடத்துபவர்கள் கலைய மறுத்து போராடி வருகின்றனர் .

கலைந்து சென்ற கும்பல் மீண்டும் கடற்கரைக்குள் நுழைய முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்கள்  போலீசார் கற்களை வீச்னர். இதில் 27 போலீசார் காயமடைந்தனர்.. போலீசார் தடியடி நடத்தியதில் இளைஞர்கள் பல் காயமடைந்தனர்.

ஆனல் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக உள்ளூர் மீனவர்கள் இணைந்தனர். இதனால் திருவல்லிக்கேணியை சுற்றியுள்ள மாட்டாங்குப்பம் , பைகிராப்ட்ஸ் சாலை , அவ்வைசண்முகம் சாலை நடுக்குப்பம் பகுதி , பெசண்ட் சாலை பகுதி முழுதும் பெரும் கலவரம் ஏற்பட்டது.

பெசண்ட் சாலையில் போராட்டக்காரர்கள் காவல்துறையின் வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். பின்னர் ஐஸ் ஹவுஸ் காவல்நிலையத்தை தீயிட்டு கொளுத்தினர்.

இதில் உதவி கமிஷனர் ரமேஷ் பாபு உள்ளிட்ட போலீசார் , பெண்போலீசார் சிக்கி கொண்டனர். தீ கொளுந்து விட்டு எரிந்தும் போலீசார் வெளியே வர முடியவில்லை. அப்போது பெசண்ட் சாலையிலிருந்த போலீசார் ஓடி வந்ததால் போராட்டக்காரர்கள் ஸ்டேஷனை விட்டு ஓடினர்.

இதையடுத்து போலீசார் ஐஸ் ஹவுஸ் ஸ்டேஷன் கதவை உடைத்து உதவி கமிஷனர் உட்பட போலீசாரை காப்பாற்றினர். 

தொடர்ந்து சென்னையில் ஆங்காங்கே போராட்டம் நடந்தாலும் திருவல்லிக்கேணியின் சுற்றுப்பகுதியில் தான் கலவரமே நடந்தது. 

Follow Us:
Download App:
  • android
  • ios