தமிழக வரலாற்றில் முதல் முறை.. தீயணைப்பு துறையில் பணியாற்றிய பெண் அதிகாரி பிரியா - IAS அதிகாரியாக நியமனம்!

Priya Ravichandran : மாநில அரசு பணியில் இருந்து கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான ஐ.ஏ.எஸ் பிரிவு அதிகாரியாக தற்பொழுது பிரியா ரவிச்சந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னதாக தீயணைப்புத் துறையில் பணியாற்றி வந்தது குறிப்பிடத்தக்கது.

Fire Department Joint Director Appointed as IAS who is Priya Ravichandran ans

யார் இந்த பிரியா ரவிச்சந்திரன் 

கடந்த 1999 ஆம் ஆண்டு பொதுச் சேவை தேர்வை எழுதி தனது 26 ஆவது வயதில் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையில் பணியாற்ற துவங்கினார் பிரியா ரவிச்சந்திரன், இவருடைய சொந்த ஊர் சேலம். சென்னை எத்திராஜ் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த அவர் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக தீயணைப்புத் துறையில் பயணித்து வருகின்றார். 

தீயணைப்பு துறையின் இணை இயக்குனராக பதவி வகித்து வரும் பிரியா ரவிச்சந்திரன் மாநில அரசு அல்லாத சிவில் சர்வீஸ் (Non State Civil Service) ஒதுக்கீட்டில் இருந்து ஐஏஎஸ் அதிகாரியாக இப்பொழுது அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது, மாநில அரசு பணியில் இருந்து கடந்த 2022 ஆம் ஆண்டுக்கான ஐஏஎஸ் பிரிவு அதிகாரியாக அவர் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Palani Murugan Temple: பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா.. முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை..!

முதல் முதலில் தனது பணியை நாகைபட்டினத்தில் நான் பிரியா தூங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு இடங்களில் மண்டல தீயணைப்பு மற்றும் மீட்பு சேவைகள் துறை அதிகாரியாகவும் அவர் பணியாற்றியுள்ளார். சென்னையில் பதவி ஏற்பதற்கு முன்னதாக அவர் கோவை மண்டலத்திலும் நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் கோட்ட அலுவலராக பணியாற்றியுள்ளார்.

பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்னும் அறிவிக்காதது ஏன்.? திட்டம் கைவிடப்பட்டு விடுமோ பொதுமக்கள் அச்சம்.! ராமதாஸ்

தன்னலமற்ற துணிச்சலான அவருடைய செயல்களுக்காக தமிழக முதல்வரால் கடந்த 2012 ஆம் ஆண்டு அவருக்கு அண்ணா பதக்கம் வழங்கப்பட்டது. 2013ஆம் ஆண்டு அவருக்கு இந்திய குடியரசு தலைவர் விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது. தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையில் தன்னலமற்ற சேவை புரிந்ததற்காக தமிழக முதல்வர் விருது கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா ரவிச்சந்திரனுக்கு வழங்கப்பட்டது.

தமிழக வரலாற்றில் முதல் முறையாக தீயணைப்பு துறையில் பணியாற்றி வந்த ஒரு அதிகாரி, ஐஏஎஸ் அதிகாரியாக நியமனம் செய்யப்பட்டுள்ளது இதுவே முதல்முறை. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios