fire again in chennai silks ground floor
சென்னை சில்க்ஸ் கட்டடத்தின் தரைதளத்தில் மீண்டும் தீப்பிடித்து எரிந்து வருகிறது. அதை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர்.
சென்னை திநகரிர் உஸ்மான் சாலையில் உள்ள பிரமாண்டமான ஜவுளி கடையான தி சென்னை சில்க்ஸில் நேற்று அதிகாலை திடீரென தீப்பிடித்து எரிந்தது.
மின்கசிவு காரணமாகதான் இந்த தீ பரவியதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
தகவலறிந்து 15 வாகனங்களில் வந்த தீயணைப்பு துறையினர் நேற்று முழுவதும் தீயை அணைக்க போராடி வந்தனர். ஆனாலும் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

இதை தொடர்ந்து இன்று அதிகாலை 3.20 மணியளவில் கட்டடத்தின் வலது புறத்தின் ஒரு பகுதியில் 7 ம் தளம் முதல் 2ம் தளம் வரை திடீர் என இடிந்து விழுந்தது.
மேலும் இன்று காலை 7 மணி அளவில் கட்டிடத்தின் முற்பகுதி முழுவதுமாக இடிந்து விழுந்தது.

இதையடுத்து தீயை கட்டுக்குள் கொண்டுவந்தாலும் உட்பகுதி எரிந்து கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கட்டிடத்தின் தரைதளத்தில் மீண்டும் தீ பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. இதனால் தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருகின்றனர்.
