தூத்துக்குடி, கயத்தாறில் உள்ள பாத்திமா மெட்ரிகுலேசன் பள்ளி வகுப்பு  மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, தான் தாக்கிய மாணவன்  இறந்துவிட்டதாக கருதி பயத்தில், பள்ளி அருகில் உள்ள கிணற்றில் விழுந்து  தற்கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

10 வகுப்பு படிக்கும் இரு மாணவர்களுக்கிடையே உணவு இடைவேளையின் போது கைகலப்பு ஏற்பட்டது. அப்போது ஒரு மாணவன் மற்றொரு மாணவனை அடித்து  தரையில் தள்ளி  விட்டுள்ளார்.

அப்போது மயக்கம் அடைந்த மாணவனை சக மாணவர்கள் மருத்துவமனைக்கு  அழைத்து சென்று உள்ளனர். தன்னால் தாக்கப்பட்ட மாணவர், இறந்துவிட்டான் என  தவறுதலாக புரிந்துக் கொண்டு பயத்தில் பள்ளி அருகில் உள்ள கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துக்கொண்டதாக தெரிகிறது 

ஆனால் இறந்த மாணவனின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள், தன் மகனை யாரோ கொன்று கிணற்றில் வீசி உள்ளதாக கூறி, காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளனர்.

இந்நிலையில், வகுப்பு அறையில் இரண்டு மாணவர்களும் மோதிக்கொள்ளும் காட்சி  சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ வெளியிடப்பட்டு உள்ளது 

விளையாட்டு விபரீதமாகும் என்பதற்கு மிக சிறந்த உதாரணமாக இந்த  நிகழ்வு நடந்து உள்ளது. இந்த செய்தி மற்ற மாணவர்களுக்கு ஒரு விழிப்புணர்வாக அமைந்துள்ளது. 

சற்றும் எதிர்பாராத இந்த சம்பவத்தால் அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்கள் பெரும் துயரம் அடைந்து உள்ளனர்.