- Home
- Tamil Nadu News
- சென்னை
- சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?
சென்னையில் அதிர்ச்சி.. காதல் திருமணம் செய்த 9 நாட்களில் மனைவி கொ*லை.. கணவர் விபரீத முடிவு.. நடந்தது என்ன?
Love Marriage Couple: சென்னை குன்றத்தூரில், காதல் திருமணம் செய்துகொண்ட சாப்ட்வேர் என்ஜினியர் தம்பதி, திருமணம் ஆன 9 நாட்களில் மர்மமான முறையில் உயிரிழந்தனர். மனைவி கட்டிலில் சடலமாகவும், கணவர் தூக்கில் தொங்கிய நிலையிலும் மீட்கப்பட்டனர்.

காதல் திருமணம்
சென்னை குன்றத்தூர் அடுத்த மூன்றாம் கட்டளை, தளபதி தெருவில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வருபவர் விஜய் (25). இவர் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவர் தன்னுடன் பணிபுரிந்து வந்த சாப்ட்வேர் பெண் என்ஜினியரான யுவஸ்ரீ (24), என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 13ம் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு குன்றத்தூர் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.
காதல் மனைவி யுவஸ்ரீ கொலை
நேற்று இரவு வீட்டில் இருந்து இருவரும் வெளியே வராத நிலையில் அந்த பெண்ணின் தங்கை வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரமாக கதவை தட்டியும் திறக்கப்படாததால் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த குன்றத்தூர் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டில் இருந்த கட்டிலில் யுவஸ்ரீ இறந்த நிலையிலும், விஜய் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டு சடலமாக தொங்கினார்.
போலீஸ் விசாரணை
பின்னர் இரண்டு பேரின் உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
கணவன் மனைவி இடையே தகராறு
அதில், கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஆத்திரத்தில் காதல் மனைவியை கொலை செய்துவிட்டு பயத்தில் விஜய் தற்கொலை செய்து கொண்டு இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காதல் திருமணம் செய்த 9 நாட்களில் புதுமண தம்பதி முடிவு அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

