திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த போடிப்பட்டியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (54). உடுமலையில் தமிழ்நாடு போலீஸ் மத நுண்ணறிவு பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக வேலை பார்த்து வந்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த சில நாட்களாக சுந்தர்ராஜன், காய்ச்சல் ஏற்பட்டு கடும் அவதியடைந்து வந்தார். பல்வேறு மருத்துவமனையில் சிகிச்சை அளித்தும் அவருக்கு குணமாகவில்லை. இதையடுத்து கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சுந்தர்ராஜன் நேற்று பரிதாபமாக இறந்தார்.

அவருடைய உடல் உடுமலையில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. உடுமலையில் உள்ள மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அப்போது ஆயுதப்படை சார்பில் துப்பாக்கி ஏந்திய 10 போலீசார் 30 குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை செலுத்தினார்கள்.