நாமக்கல் 

நாமக்கல்லில், சாலையில் தனியாக நடந்துச் சென்ற பெண் அரசு அதிகாரியிடம் இருந்து 10 சவரன் தாலிச் சங்கிலிப் பறிக்கப்பட்டது. ஒருவாரம் கழித்து திருடனை காவலாளர்கள் பிடித்தனர். அவரிடம் இருந்து நகையையும் மீட்டனர்.

namakkal க்கான பட முடிவு

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, தொண்டிகரட்டைச் சேர்ந்தவர் மணிமேகலை (52). அரசு விவசாயத் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் போன வாரம் இரவு நேரத்தில் தொண்டிகரட்டு பகுதியில் நடந்துச் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, மோட்டார் பைக்கில் வந்த ஒருவர் மணிமேகலையின் கழுத்தில் கிடந்த 10 சவரன் தாலிச் சங்கிலையை பறித்துக்கொண்டு பைக்கில் விர்ரென்று தப்பித்துச் சென்றுவிட்டார். சாலையில் யாருமில்லாததால் திருடனைப் பிடிக்க முடியவில்லை. தாலியைப் பறித்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்த மணிமேகலைக்கு காயம் ஏற்பட்டது. 

chain snatch க்கான பட முடிவு

பின்னர், தாலிச் சங்கிலி பறிப்போனது குறித்து திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் வழக்குப்பதிந்த காவலாளர்கள் சங்கிலிப் பறிப்பு குறித்த விசாரணையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் கூட்டப்பள்ளிப் பகுதியில் காவலாளர்கள் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவ்வழியாக மோட்டார் பைக்கில் வந்தவரை மடக்கிய காவலாளர்கள் விசாரணை நடத்தினர். அவர் கூறிய பதிலில் திருப்தி அடையாத காவலாளர்களுக்கு அவர் மீது சந்தேகம் எழுந்தது.

arrest க்கான பட முடிவு

மேலும் விசாரித்ததில் அவர் அதே ஊரைச் சேர்ந்த மாணிக்கம் (26) என்பதும், திருச்செங்கோடு ஜீவா நகரில் விசைத்தறி கூடத்தில் தொழிலாளியாக வேலைப் பார்த்து வருவதும் தெரிந்தது. அதுமட்டுமின்றி, மணிமேகலையிடம் 10 சவரன் தாலிச் சங்கிலையைப் பறித்துச் சென்றதும் இவர்தான் என்பதும் தெரியவந்தது.

இதனையடுத்து மாணிக்கத்தை காவலாளர்கள் கைது செய்தனர். அவரிடம் இருந்த 10 சவரன் தாலிச் சங்கிலையை மீட்ட காவலாளர்கள், அவரது மோட்டார் பைக்கையும் பறிமுதல் செய்தனர்.