father Killed while gone to ask justice who misbehave with his daughter
விழுப்புரம்
விழுப்புரத்தில், மகளிடம் தவறாக நடந்தவரை தட்டிக் கேட்க சென்ற தந்தையின் மார்பில் செங்கலை போட்டுக் கொன்றவரை காவலாளர்கள் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், திருநாவலூரை அடுத்த ரகுநாதபுரத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் பூபதி (45). விவசாயியான இவரது மகளிடம் அதே கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் (35) என்பவர் தவறாக நடக்க முயன்றுள்ளார்.
இதுகுறித்து பூபதி நேற்று பிற்பகல் வெங்கடேசனிடம் கேட்டுள்ளார். அந்த சமயத்தில் இவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பு ஆனது.. அப்போது ஆத்திரமடைந்த வெங்கடேசன் கீழே கிடந்த செங்கல்லை எடுத்து பூபதியின் மார்பில் போட்டுள்ளார்..
அதில், பலத்த காயமடைந்த பூபதி மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பின்னர், இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருநாவலூர் காவலாளர்கள் பூபதியின் உடலை மீட்டு, விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர், இது தொடர்பாக வழக்குப்பதிந்து வெங்கடேசனை காவலாளர்கள் ககைது செய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகளிடம் தவறாக நடந்ததை தட்டிக் கேட்க சென்ற தந்தையை மார்பில் செங்கலை போட்டு கொன்ற சம்பவ அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
