10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக  விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் தமிழக அரசை கண்டித்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

farmers protest against tn government near rajarathinam stadium in chennai vel

உழவர்களின் அனைத்து கடன்களும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும், தமிழ்நாட்டில் உழவர்களுக்கு கடன் நிவாரண ஆணையம் அமைத்திட வேண்டும். மின்சார சட்ட திருத்த மசோதாவை திருப்பி பெற வேண்டும். இலவச மின்சாரத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பத்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  தமிழகம் முழுவதிலும் இருந்து 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை ராஜரத்தினம் மைதானம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதேபோல கைகளில்  கரும்பு, நெல், மஞ்சள் என தாங்கள் விளைவித்த பொருட்களை கைகளில் ஏந்தியபடி தங்களது வாழ்வாதார கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கைது செய்யப்பட்ட குற்றவாளிகளை விடுவிக்ககோரி ஆடைகளை அவிழ்த்துபோட்டு திருநங்கைகள் அட்டூழியம்

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட அத்தனை விவசாயிகளையும் போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்து வண்டியில் ஏற்றினர். இன்று தலைமை செயலகத்தில் இரண்டாவது நாளாக சட்டசபை நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளை அப்புறப்படுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்ட நிலையில் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

சேலத்தில் துப்புரவு பணியாளர் கொலை வழக்கில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 8 பேர் கைது

போராட்டத்தை கைவிட முடியாது என விவசாயிகள் ராஜரத்தினம் மைதானம் அருகே   அமர்ந்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த விவசாயிகளை போலீசார் கூண்டு கட்டாக தூக்கி வண்டியில் ஏற்றி கைது செய்தனர்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios