Asianet News TamilAsianet News Tamil

காவல்நிலைய வாசலில் ஆடைகளை அவிழ்த்து போட்டு திருநங்கைகள் அட்டூழியம்; முகம் சுழித்த போலீசார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கக்கோரி காவல் நிலைய வாசலில் திருநங்கைகள் முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

transgender protest against police officers on chain theft case in chengalpattu vel
Author
First Published Oct 10, 2023, 10:28 AM IST | Last Updated Oct 10, 2023, 10:28 AM IST

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி மற்றும் ஊரப்பாக்கம் பகுதிகளில் தனியாக செல்லும் நபர்களை குறிவைத்து வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பது தொடர்பாக கூடுவாஞ்சேரி காவல் நிலையத்திற்கு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன. அதன் அடிப்படையில் குற்றவாளிகளை பிடிக்கும் விதமாக தனிப்படை அமைத்து கூடுவாஞ்சேரி காவல் துறையினர் சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில்  கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஆனந்த தாண்டவம், காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது ஊரப்பாக்கம் பகுதியில் சந்தேகப்படும் படியான முறையில் மூன்று நபர்கள் சுற்றி நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்த போது, சென்னை கொடுங்கையூர் பகுதியைச் சேர்ந்த மகேஷ் (வயது 20), லிங்கேஸ்வரன்(21), சென்னை மாதவரம் பால் பண்ணை அருகில் வசித்து வரும் ஸ்டீபன் ராஜ்  (22) என்பது தெரியவந்தது.

5 வருடங்களுக்கு பின் மீண்டும் ஜோடி சேர்ந்த தம்பதி; உறவினரின் தலையில் கல்லை போட்டு கொன்ற கள்ளகாதலன்

இவர்கள் சென்னையில் இருந்து இப்பகுதிக்கு வந்து சாலையில் தனியாக செல்லும், பெண்கள் மற்றும் தனி நபர்களை குறி வைத்து, பணம், நகை, செல்போன் என தொடர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்தது போலீஸ்  விசாரணையில்  தெரிய வந்தது. அதன் அடிப்படையில் அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து  செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அந்த மூன்று நபர்களை கைது செய்து சிறையில் அடைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து 10க்கும் மேற்பட்ட திருநங்கைகள் கூடுவாஞ்சேரி காவல்நிலையத்தில் முற்றுகையிட்டனர். மேலும், அந்த மூன்று நபர்களை விடுவிக்க கோரி போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் திருநங்கை ஒருவர் தனது உள்ளாடைகளை அவிழ்த்து காவல் நிலைய வாசலில் தூக்கி விசி அராஜகத்தில் ஈடுபட்டார். தொடர்ந்து தங்களது கைகளை தட்டி கத்தி கூச்சலிட்டதால் காவல் நிலைய வளாகம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios