திருவள்ளூர்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் சங்கத்தினர் நேற்று திருவள்ளூரில் அறவழி கண்டன ஊர்வலம் நடத்தினர்.  

இந்த ஊர்வலத்தில், "காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், 

ஆரணி ஆறு, கொசஸ்தலை ஆறு ஆகியவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் விவசாயிகளின் வாழ்வாதரத்தை முழுமையாக பாதிக்கும் இறால் மற்றும் வண்ணமீன்  பண்ணைகளை அகற்ற வேண்டும்" உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் இதில் பங்கேற்றவர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

இந்த ஊர்வலம் திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ஹரிஹரன் பஜார் வீதி தேரடித்தெரு வழியாக நடந்தது. 

இந்த ஊர்வலத்தின்போது பொன்னேரி அம்பேத்கர் சிலை முன்பு கண்டண உரையாற்றினர். இந்த கண்டன ஊர்வலத்தில் 300–க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.