வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் 14 வது நாளாக நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாளை மறுநாள் விவசாயிகள் மத்திய அமைச்சர்களை சந்திக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

டெல்லி ஜந்தர்மந்தரில்  பகுதியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும், விவசாயிகளின் தற்கொலையைத் தடுக்க வேண்டும், ஓய்வூதிம் வழங்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு  கோரிக்கைகளை வலியுறுத்தி 14 ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்த போராட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள், திரையுலகினர், இளைஞர்கள் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், நாளை மறுநாள் விவசாயிகள் மத்திய அமைச்சர்களை சந்திக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.

இதில், விவசாயிகளுடன் வேளாண் அமைச்சர் துரைக்கண்ணு அமைச்சர்களை சந்தித்து பேச உள்ளார்.