Asianet News TamilAsianet News Tamil

கரும்பு டன்னுக்கு ரூ.4000 தரோம்-னு சொன்னீங்களே, என்னாச்சு? பி.ஆர்.பாண்டியன் கேள்வி

தமிழக அரசு இன்று வேளாண் துறைக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிலையில் இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

farmer PR Pandian comments about tamil Nadu agriculture budget vel
Author
First Published Feb 20, 2024, 11:01 PM IST

தமிழ்நாடு அரசு நான்காவது ஆண்டாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட்தாக்கல் செய்திருப்பது குறித்து செய்தியாளர்களிடம் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர்  பி ஆர்.பாண்டியன் தெரிவித்திருப்பதாவது. தமிழ்நாடு அரசு 4வது ஆண்டாக வேளாண்மைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்திருப்பது வரவேற்கக் கூடியதாகும். 

மண்ணுயிர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்து திட்டங்கள் அறிமுகப்படுத்தி இருப்பதை பாராட்டுகிறோம். அதே நேரத்தில் உற்பத்திக்கான தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கு நிதி ஒதுக்கப்படுகிறதே தவிர, தேவையான அளவு தேவைக்கேற்ப ஒதுக்கீடு செய்வதில் தொடர்ந்து குறைபாடு நீடித்துக் கொண்டிருக்கிறது.  

முதல்ல குடிக்க தண்ணி குடுங்க, அப்பறமா ரோடு போடுங்க; எம்.பி. ஆ.ராசாவின் வாகனத்தை பொதுமக்கள் மறித்ததால் பரபரப்பு

கட்டுக்கடங்காத பூச்சிக்கொல்லி மருந்துகள், களைக்கொல்லி போன்றவை விற்பனையை தடுக்க எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மனிதருக்கு மருத்துவர்கள் சான்று இன்றி மருந்து பெற முடியாது. ஆனால் விவசாயிகளுக்கு கட்டுக்கடங்காத பூச்சிக் கொள்ளி மருந்துகளை விற்பனை கடைகள் தன் விருப்பத்திற்கு விற்பனை செய்து கொள்கின்றன. இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் மண்ணுயிர் பாதுகாப்பு பொருத்தமற்றது.

பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் அறிவிப்புக்கு நிதி ஒதுக்கீடு இல்லாமல் விளம்பரமாகவே தொடர்கிறது. குறிப்பாக இரண்டு ஆண்டுகளாக கலைஞர் வேளாண் கிராம வளர்ச்சி திட்டத்திற்கு நிதி ஒதுக்கீடு இல்லாமல் முடக்கப்பட்டுள்ளது. இரண்டு தின்ங்கள் கூட பட்ஜெட் குறித்து விவாதிப்பதற்கு அனுமதிக்காமல் வெறும்  வாசிப்பது மட்டுமே சம்பிரதாய சடங்காக மேற்கொள்வது விவசாயிகளுடைய பாதிப்புகளுக்கு ஏற்ப இந்த பட்ஜெட் தீர்வு காண வழி வகுக்காது. 

சென்ற ஆண்டு அறிவிக்கப்பட்ட அதே பட்டியல்களையே இந்த ஆண்டு வாசிப்பதால் எந்த பயனும் இருக்காது. எனவே ஏற்கனவே கரும்பு டன் ஒன்றுக்கு 4000 ம்,நெல் குவிண்டால் ஒன்றுக்கு 2500 ம் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் உடனடியாக வழங்குவோம் என்று 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக அறிவித்தது. அது குறித்து இன்றுவரையிலும் வாய் திறக்காமல் இருப்பதும் பட்ஜெட்டை மட்டுமே மிகப் படுத்தி பேசுவதும் விவசாயிகளை  ஏமாற்ற முடியாது. அரசு தான் ஏமாறப் போகிறது. 

எந்தெந்த துறைகளின் கீழ் எவ்வளவு நிதி பெறப்படுகிறது? எந்த வகையில் பட்ஜெட்டுக்கான நிதி முதலீடுகள் ஈர்க்கப்படுகிறது என்பது குறித்து இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.எனவே ஏதோ விளம்பரத்திற்காக பட்ஜெட்டை பயன்படுத்துவது ஏற்கத்தக்கதல்ல. இதனால் விவசாயத்திற்கு எந்த பயனும் அளிக்காது. 

கரூரில் படுகொலை செய்யப்பட்ட ரௌடியின் கொலைக்கு நியாயம் கேட்டு உறவினர்கள் போராட்டம்; போலீஸ் குவிப்பு

குறிப்பாக காவிரி -வைகை.குண்டாறு  இணைப்பு திட்டம். ஏரிகள் பாசன வடிகாள்கள் மற்றும் ஆறுகள் தூர்வாருவதற்கான சிறப்பு திட்டங்கள் குறித்து எதுவும் இடம் பெறவில்லை. இதனால் இந்த பட்ஜெட் மீது விவசாயிகள் நம்பிக்கை இழந்து உள்ளனர். 

எனவே உடனடியாக நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ3500, கரும்பு டன் ஒன்றுக்கும் 5000, வழங்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும். பருப்பு உள்ளிட்ட எண்ணெய் வித்துப் பயிர்களை உரிய விலை கொடுத்து கொள்முதல் செய்ய வேண்டும். 

பொது விநியோகத் திட்டத்தில் தேங்காய் எண்ணெய், , கடலை எண்ணெய், விற்பனையை ஊக்கப்படுத்த வேண்டும்.பாமாயில் விற்பனையை தடை செய்ய வேண்டும். இது குறித்தான அறிவிப்புகள் இந்த பட்ஜெட்டில் இடம் பெறாதது விவசாயிக்கு மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. உடனடியாக செயல்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்

மத்திய அரசு இரசாயன உர பயன்பாட்டிற்கு கடந்தாண்டு வழங்கி வந்த மானிய தொகை ரூபாய் 2.60 லட்சம் கோடியிலிருந்து 1.60 லட்சம் கோடியாக குறைத்துவிட்டது. இந்நிலையில் உர தட்டுப்பாடும், விலையற்றமும் எதிர்காலத்தில் ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது. இதற்கு மாற்றாக இயற்கை உர உற்பத்தியையும், பயன்பாட்டையும் ஊக்கப்படுத்த வேண்டும் என மத்திய அரசும் தமிழ்நாடு அரசும் நினைப்பது தவறில்லை. ஆனால் இதனை ஈடு செய்கிற வகையில் இயற்கை உர விற்பனைக்கும் உற்பத்திக்கும் உரிய மானிய திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்றார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios