கெட்டுப்போன தந்தூரி சிக்கன்.. பிரபல ஹோட்டலை இழுத்து மூடிய அரசு அதிகாரிகள்.!

பிரபல தனியார் அசைவ உணவகத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் கெட்டுப்போன தந்தூரி சிக்கன் கொடுத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

famous private non vegetarian restaurant that spoiled Tandoori chicken was served 2 days ago

வழக்கத்தில், கெட்டுப்போன இறைச்சிகளில் பாக்டீரியாக்களும் வைரஸ்களும் சில மணி நேரங்களில் கோடிக்கணக்கில் பல்கிப் பெருகிவிடுகிற ஆபத்து நிறைந்தவை என்று எச்சரிக்கின்றனர். அதே போல அசைவ ஓட்டல்களில் உணவு பொருட்களை வாடிக்கையாளர் விரும்பும் வகையில் காட்டுவதற்காக கலருக்காக ரசாயன பொடிகளையும், அதிக காரம் சேர்க்கவும் செய்கின்றனர்.

famous private non vegetarian restaurant that spoiled Tandoori chicken was served 2 days ago

மேலும் செய்திகளுக்கு.. கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !

இதனை அருந்தும் மக்களுக்கு பல்வேறு உடல் உபாதை ஏற்படுவதுடன் புற்றுநோய், குடல் நோய்களுக்கு காரணமாகிறது. தொடர்ந்து பல்வேறு ஹோட்டல்களில் கெட்டுப்போன உணவுகளை விற்பனை செய்து வருவது கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் குன்றத்தூர் சாலையில் உள்ள பிரபல தனியார் அசைவ உணவகத்தில் கடந்த 2 தினங்களுக்கு முன் தந்தூரி சிக்கன் சாப்பிட்டுள்ளனர்.

இதனை சாப்பிட்ட கச்சிப்பட்டு பகுதியை சேர்ந்த அப்பா, மகன் உடல் உபாதையால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட உணவுப் பாதுக்காப்பு துறைக்கு வந்த புகாரின் அடிப்படையில் குன்றத்தூர் உணவுப் பாதுகாப்பு ஆய்வாளர் செந்தில்குமார் தனியார் உணவகத்தை ஆய்வு மேற்கொண்டார். 

மேலும் செய்திகளுக்கு.. ஐ.டி ரெய்டில் மாட்டிய 500 கோடி.. சிக்கிய எடப்பாடியின் உறவினர் & வேலுமணியின் நண்பர்.!

famous private non vegetarian restaurant that spoiled Tandoori chicken was served 2 days ago

இதில் உணவகத்தின் சமையலறை மற்றும் உணவு செய்யும் விதம், இறைச்சி வைக்கும் பிரிசர் பாக்ஸ் என அனைத்தும் சுகாதாரமற்ற முறையில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இருந்ததால் அந்த உணவகத்தை இரண்டு நாட்களுக்கு மூட உத்தரவிட்டார். மேற்கண்ட குறைபாடுகள் சரி செய்த பிறகே உணவகத்தை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். பிரபல தனியார் உணவகத்தை உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு செய்து இரண்டு நாட்களுக்கு மூட செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..கைலாசா ஆண்டவர் மீண்டும் வருகிறார்.. நித்யானந்தா ரிட்டர்ன்ஸ்.! பக்தர்களே ரெடியா.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios