L.Murugan:சந்தி சிரிக்கின்ற போலி திராவிட மாடல் அரசு! இதுதான் சமூக நீதி ஆட்சியா முதல்வரே? விளாசும் எல்.முருகன்!
மகள் வளர்மதி தாயை ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மருத்துவமனை ஊழியர்கள் ஸ்ட்ரெச்சர் வழங்காமல் அலைக்கழித்துள்ளனர்.
பாமர மக்களுக்கு தேவைப்படுகிற அடிப்படை வசதியை கூட ஏற்படுத்திக் கொடுக்க முடியாத போலி சமூக நீதி அரசாங்கத்தை தான், நாட்டின் முதன்மை ஆட்சி என்று கூறிக் கொள்கிறீர்களா என முதல்வருக்கு எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஈரோடு மாவட்டம் பெரியவலசு கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி சொர்ணா. இவர் சாலையில் நடந்து சென்றபோது இருசக்கர வாகனம் மோதியதில் காயமடைந்துள்ளார். இதனையடுத்து அவரது மகள் வளர்மதி தாயை ஈரோடு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றார். அப்போது மருத்துவமனை ஊழியர்கள் ஸ்ட்ரெச்சர் வழங்காமல் அலைக்கழித்துள்ளனர்.
இதையும் படிங்க: காக்கியை தாக்கும் போதை ஆசாமிகள்! காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் என்ன செய்யப்போகிறார்? இபிஎஸ்.!
பின்னர் யாருடை உதவியும் இல்லாமல் தனி ஆளாக தாயை தூக்கிச் சென்று அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தார். இதனை அங்கிருந்தவர்கள் செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளனர். இது வைரலானதை அடுத்து பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் போலி திராவிட மாடல் என கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சந்தி சிரிக்கின்ற ‘போலி திராவிட மாடல்’ அரசு. அன்றாடம் தங்களுடைய குடும்பத்தை காக்க அயராது உழைக்கும் பாமர மக்களுக்கு, அரசு மருத்துவமனைகளே தெய்வங்களாக இருந்து வருகின்றன. அப்படி இருக்கையில், இப்படியாக பாமர மக்களுக்கு தேவைப்படுகிற அடிப்படை வசதியை கூட ஏற்படுத்திக் கொடுக்க முடியாத ‘போலி சமூக நீதி’ அரசாங்கத்தை தான், நாட்டின் முதன்மை ஆட்சி என்று கூறிக் கொள்கிறீர்களா, முதல்வர் ஸ்டாலின் அவர்களே..? என்று எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: Tamilnadu School Reopening Postponed: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறது?