Asianet News TamilAsianet News Tamil

குரங்கணியில் விவசாயிகள்தான் தீ வைத்தனர் - பகீர் கிளப்பும் டிரெக்கிங் கிளப் பீட்டர்...!

Exciting Club and Trekking Club Peter
Exciting Club and Trekking Club Peter
Author
First Published Mar 13, 2018, 3:20 PM IST


குரங்கணியில் உரிய அனுமதி பெற்றுதான் டிரெக்கிங் சென்றோம் எனவும் அப்பகுதியில் விவசாயிகள் தான் தீ வைத்துள்ளனர் எனவும் சென்னை டிரெக்கிங்க் கிளப் விளக்கம் அளித்துள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் 40 பேர் சிக்கினர். இரண்டு குழுக்களாக மலையேற சென்ற இவர்கள், திங்கட்கிழமை திரும்ப திட்டமிட்டதாக கூறப்படுகிறது. 

இவர்களில் 13 பேர் திருப்பூரில் இருந்தும் 27 பேர் சென்னையில் இருந்தும் சென்றுள்ளனர். இந்நிலையில், இந்த தீ விபத்தில் 11 பேர் இன்று வரை உயிரிழந்துள்ளனர். 

மேலும் பலர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  உரிய அனுமதி வாங்காமல் டிரெக்கிங் சென்றதே உயிரிழப்புக்கு காரணம் என அரசு தரப்பில் கூறப்பட்டது. 

இதனிடையே டிரெக்கிங் ஏற்பாடு செய்த பீட்டர் என்பவர் தலைமறைவானார். இந்நிலையில், இன்று பீட்டர் முகநூல் பக்கத்தில் விளக்கம் கொடுத்துள்ளார். 

அதாவது, குரங்கணியில் உரிய அனுமதி பெற்றுதான் டிரெக்கிங் சென்றோம் எனவும் அப்பகுதியில் விவசாயிகள் தான் தீ வைத்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார். 

வழிகாட்டிய அருண், மற்றும் விபின் டிரெக்கிங் பயிற்சியில் 7 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் எனவும் மேலே சென்று கீழே இறங்கும் போதுதான் விவசாயிகள் தீ வைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios