வேலூரில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியின் போது சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது டயர் பதியும்படி சாலை அமைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேற லெவல் சாலை பணி
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய் மற்றும் புதிய கட்டிடங்கள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வேலூர் காளியம்மாள் கோயில் பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. அப்போது வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்ட பைக்கின் டயர் புதையும் படி சாலை அமைக்கப்பட்டுள்ள சம்பவம் அந்த பகுதி மக்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது.


பைக் மீது சாலை
இந்த சம்பவம் தொடர்பாக இருசக்கர வாகனத்தின் உரிமையாளர் சிவா கூறுகையில், இந்த பகுதியில் சாலை போடவுள்ளதாக எந்த தகவலும் இல்லை, நேற்று இரவு 11 மணி வரை சாலை அமைப்பதற்கான எந்த வித அறிகுறியும் தென் படவில்லை. இந்தநிலையில் காலையில் வந்து பார்க்கும் போது காளியம்மாள் பகுதி முழுவதும் புதிய சாலை போடப்பட்டுள்ளது. அப்போது தனது பைக்கின் சக்கரம் புதையும் படியும் சிமெண்ட் சாலை போட்டுள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக சாலை ஒப்பந்ததாரரிடம் புகார் தெரிவிக்கையில் உரிய முறையில் பதில் அளிக்கவில்லையென கூறினார். இதனையடுத்து சிமெண்ட் சாலையில் பைக் சக்கரம் சிக்கியதால் வெளியே எடுப்பதில் சிரமம் ஏற்பட்டது. பின்னர் போராடி, சாலையை உடைத்து வண்டியை மீட்டுள்ளனர்.
மேயர்னா இஷ்டத்துக்கு முடிவு எடுப்பீங்களா.?? பிரியா ராஜனை அலறவிட்ட கே.கே நகர் தனசேகர்

நோட்டீஸ் அனுப்பிய மாநகராட்சி
இதுகுறித்து வேலூர் மாநகராட்சி அதிகாரி கூறுகையில், இந்த சம்பவம் கேள்விபட்டதும் நேரடியாக சென்று ஆய்வு செய்தோம்.இருசக்கர வாகனத்தை அப்புறப்படுத்தாமல் சாலை போடப்பட்டது, தொடர்பாக சம்பந்தப்பட்ட பொறியாளர் மற்றும் ஒப்பந்ததாரரிடம் உரிய விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார். அவர்கள் கொடுக்கும் விளக்கத்தை தொடர்ந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அறப்போர் இயக்கம் வேலூரில் வேற லெவல் சாலை பணி என்றும் பழைய சாலை மீது புதிய சாலை அமைத்து வந்த ஒப்பந்ததாரர்கள் தற்பொழுது சாலையில் நிற்கும் வண்டிகள் மீதும் புதிய சாலை அமைத்து பழகுகிறார்கள். அடுத்து யாராவது சாலையில் தூங்கினால் அவர்கள் மீதும் சாலை போடுவார்களா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதையும் படியுங்கள்
