பண மோசடி வழக்கில் விசாரணைக்காக மாவட்ட குற்றப் பிரிவில் இன்று ஆஜரான முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கொரோனா தொற்று காரணமாக திருப்பி அனுப்பிவைக்கப்பட்டார்.
ஆவின் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அரசு வேலை வாங்கித் தருவதாக 3 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டார் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அந்த வழக்கில் இன்று அவர் விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டுமென கடந்த 28-ம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியிருந்தனர். ஆனால் தனக்கு கொரோனா உறுதியாகியிருப்பதால் தான் சிகிச்சை எடுத்து வருவதாகவும், அதனால் இன்று தன்னால் விசாரணைக்கு ஆஜராக முடியாதென்றும் கூறி, தன் மீதான விசாரணையை ஒத்திவைக்க குற்றப்பிரிவுக்கு இன்று கடிதம் அளித்திருக்கிறார் ராஜேந்திர பாலாஜி.
அதையடுத்து விருதுநகரில் உள்ள மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி இன்று காலை நேரில் ஆஜரானார். அப்போது கடந்த 23 ஆம் தேதி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் தொடர்ந்து அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதோடு, நேற்று மீண்டும் பரிசோதனை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். பரிசோதனை அறிக்கையில் கொரோனா இல்லை என சான்றிதழ் பெற்ற பின்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தினர். அதையடுத்து "கொரோனா தொற்று இல்லை என சான்று வந்தபின்பு எப்போது அழைத்தாலும் தான் மாவட்ட குற்றப் பிரிவில் விசாரணைக்கு ஆஜராவேன்" என கே.டி.ராஜேந்திர பாலாஜி கடிதம் அளித்தார்.

மேலும், சம்மன் அனுப்பும் பொழுது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அவரை அனுப்பிவைத்தனர்.அப்போது கடந்த 23 ஆம் தேதி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதாகவும் தொடர்ந்து அதற்காக சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதோடு, நேற்று மீண்டும் பரிசோதனை செய்துள்ளதாகவும் தெரிவித்தார். பரிசோதனை அறிக்கையில் கொரோனா இல்லை என சான்றிதழ் பெற்ற பின்பு விசாரணைக்கு ஆஜராகுமாறு மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அறிவுறுத்தினர்.
அதையடுத்து "கொரோனா தொற்று இல்லை என சான்று வந்தபின்பு எப்போது அழைத்தாலும் தான் மாவட்ட குற்றப் பிரிவில் விசாரணைக்கு ஆஜராவேன்" என கே.டி.ராஜேந்திர பாலாஜி கடிதம் அளித்தார். மேலும், சம்மன் அனுப்பும் பொழுது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று கூறி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் அவரை அனுப்பிவைத்தனர்.முன்னதாக ஆவின் முறைகேடு வழக்கில் கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்ட ராஜேந்திர பாலாஜிக்கு, உச்சநீதிமன்றம் 4 வார கால நிபந்தனை ஜாமீன் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
