மகளிர்க்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடி அதிமுக தான்.! எடப்பாடி பழனிச்சாமி
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதாவை வரவேற்றுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மகளிர்க்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவுக்கே முன்னோடி அதிமுக தான் என தெரிவித்துள்ளார்.
மகளிர்க்கு இட ஒதுக்கீடு- இபிஎஸ் வரவேற்பு
மகளிர்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் வகையில், சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் இது தொடர்பாக X தளத்தில் பதிவிட்டுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, "பெண்களைப் பாதுகாப்பது மற்றும் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவது மட்டும் உண்மையான பெண் சுதந்திரம் ஆகாது. நாட்டை வழி நடத்துவதிலே பெண்களுக்கு உரிய பங்கு வழங்கப்பட வேண்டும்" என்ற கருத்தை முன்வைத்து தமிழகத்தில் உள்ளாட்சி பதவிகளில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடும் பின்னர் அதையே
இந்தியாவிற்கே முன்னோடி அதிமுக
2016ல் 50% இடஒதுக்கீடாக உயர்த்தி வழங்கி பெண் இனத்திற்கே பெருமை சேர்த்தவர் ஜெயலலிதா என தெரிவித்துள்ளார்.1991ல் ஜெயலலிதா முதன் முதன்முதலாக ஆட்சி அமைத்த போது 31 பெண் சட்டமன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ள எடப்பாடி பழனிசாமி, மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதில் இந்தியாவிற்கே முன்னோடியாக திகழ்ந்தது அஇஅதிமுக மட்டும் தான் என தெரிவித்துள்ளார். அதிமுகவை முன்மாதிரியாக கொண்டு நாடாளுமன்றத்தில் இந்தியா முழுவதற்கும் நிறைவேற்றப்பட்டுள்ள புதிய மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அதிமுக சார்பில் வரவேற்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்