பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசி நாள்.. பதிவு செய்ய முடியாமல் தவிக்கும் விவசாயிகள்- கோரிக்கை விடுக்கும் இபிஎஸ்

மழை மற்றும் இணையதள சேவை பாதிப்பு காரணமாக பயிர் காப்பீடு செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பதால், டிசம்பர் வரை காலக்கெடுவை நீட்டிக்க எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார். 
 

EPS request for extension of date for crop insurance KAK

பயிர் காப்பீடு - இன்றே கடைசி நாள்

சம்பா பயிர் காப்பீடு செய்ய இன்று கடைசிநாளாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இணைய சேவை சரியில்லாத காரணத்தாலும், மழையாலும் விவசாயிகள் விண்ணப்பங்களை உள்ளீடு செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில்,  இந்த ஆண்டு காவிரியில் இருந்து சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படாத நிலையில், டெல்டா விவசாயிகள் ஆழ்துளை கிணற்றுப் பாசனம் மூலம் சம்பா சாகுபடி பணிகளை துவக்கியுள்ளனர்.

இதுபோன்ற சூழ்நிலையில் பயிர் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் இழப்பீடு பெற விவசாயிகள் கிராம நிர்வாக அதிகாரிகளிடம் அதற்குரிய சான்றிதழ் பெற்று இ-சேவை மையங்கள் மூலமாக விண்ணப்பிக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்யும் பருவ மழையின் காரணமாக இணைய சேவை சரிவர கிடைக்காததால் எந்த விண்ணப்பங்களையும் உள்ளீடு செய்ய இயலாமல் விவசாயிகளும், 

EPS request for extension of date for crop insurance KAK

காலக்கெடுவை நீட்டித்திடுக

இ-சேவை மைய ஊழியர்களும் தவித்த வண்ணம் உள்ளனர். தொடர்ந்து விவசாயிகளும், விவசாய சங்கங்களும் கால நீட்டிப்பு செய்யும் கோரிக்கையினை எழுப்பியும், விடியா திமுக அரசு இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கடுங்கோபத்தில் உள்ளனர். இந்நிலையில் பயிர் காப்பீடு செய்ய இன்றே கடைசிநாள் என்ற நிலையில் இணைய வழி சேவை எப்பொழுது சீராகும் என்பது தெரியாத நிலையில், விவசாயிகளும்

, இ-சேவை மைய ஊழியர்களும் பயிர் காப்பீடு விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே, உடனடியாக விடியா அரசின் முதலமைச்சர், மத்திய அரசுக்கு கடிதம் எழுதி, தமிழகம் முழுவதும் பயிர் காப்பீடு பிரீமியம் கட்டுவதற்கான கடைசி தேதியை டிசம்பர் முதல் வாரம் வரை நீட்டிக்க வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

இதையும் படியுங்கள்

உங்களுக்கு சந்தேகம்னா என்கூட வாங்க! நேரடியாக சென்று ஆய்வு செய்வோம்! இபிஎஸ்-ஐ அலறவிடும் அமைச்சர் மா.சு.!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios