மளிகைப்பொருட்களைப் போல் சாதாரணமாக கிடைக்கும் கஞ்சா... பாதுகாப்பு இல்லாத நிலையில் தமிழகம்- விளாசும் இபிஎஸ்

அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறையினருக்குமே பாதுகாப்பற்ற நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளதாக தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிற்கான முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் அமைந்துள்ளது என விமர்சித்துள்ளார். 
 

EPS has criticized the lack of Tamil Nadu security for civil servants and civilians KAK

அரசு ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க தமிழக போலீசார் தீவிரமாக முயன்று வருகின்றனர். இருந்த போதும் கஞ்சா மற்றும் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும், இதன் காரணமாக கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீரழிக்கும் பிரச்சனைகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிவெளியிட்டுள்ள அறிக்கையில்,

கும்பகோணத்தில் இளைஞர்கள் கஞ்சா போதையில் அரசுப் பேருந்து ஓட்டுநரைத் தாக்கியதாகவும், சென்னை கண்ணகி நகர் பகுதியில் விசாரணைக்கு சென்ற காவலர்கள் இருவரை போதை ஆசாமிகள் இருவர் தாக்கியதாகவும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. அரசு ஊழியர்களுக்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய காவல்துறையினருக்குமே பாதுகாப்பற்ற நிலையில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுள்ளது.

 

 

சாதாரணமாக கிடைக்கும் போதைப்பொருட்கள்

சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிற்கான முக்கிய காரணமாக போதைப்பொருள் புழக்கம் அமைந்துள்ளது. நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, மளிகைப் பொருட்களைப் போன்று மிகச் சாதாரணமாக கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கிடைப்பதாக பத்திரிக்கையாளர்களும் பொதுமக்களும் என்னிடத்தில் மிகவும் வருத்தத்துடன் தெரிவித்தனர்.  இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடையே இந்த போதைப்பொருட்கள் புழங்குவது  மிகுந்த கவலையளிப்பதும் , கண்டணத்துக்கு உரியதாகும், சீர்கெட்டு போயிருக்கும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை நிர்வகிக்க தக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்துவதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 

Lock Up Death : லாக் அப் டெத்... செவ்வாப்பேட்டை காவல்நிலையத்தில் நடந்தது என்ன.? போலீசார் வெளியிட்ட தகவல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios